எடப்பாடியே மோடியை பார்க்க முடியல.. தம்பிதுரை எப்படி பார்த்தாரு? ஓகே சொன்ன டெல்லி.. இதுதான் சீக்ரெட்?
டெல்லி: அதிமுக கட்சியின் மூத்த எம்பி தம்பிதுரை பிரதமர் மோடியை நேரில் சந்தித்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் எப்படி பிரதமர் மோடியை சந்தித்தார், இந்த சந்திப்பிற்கு பின் என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பின் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் டெல்லியில் இருந்தார்.
பயணத்தை பாதியில் முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பினார். டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி முதலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி
அப்போது பிரதமர் மோடியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்த்தும் கைகுலுக்கினார். இதன் பின் திங்கள் கிழமை புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடியை தனியாக சந்திக்க முடியவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு திரும்பினார்.

நேரம் கொடுக்கவில்லை
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக மோதல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் எடப்பாடி பேச திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக உறவு, அதிமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எடப்பாடி பிரதமர் மோடியிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் எடப்பாடியை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை.

என்ன நடந்தது?
இந்த நிலையில் எடப்பாடி அணியை சேர்ந்த எம்பி தம்பிதுரையை சந்திக்க பிரதமர் மோடி நேரம் கொடுத்துள்ளார். எடப்பாடியே மோடியை பார்க்க முடியல.. தம்பிதுரை எப்படி பார்த்தாரு? என்ற விவாதம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பிவிட்ட நிலையில் டெல்லியில் பல முயற்சிகளை செய்து ஒருவழியாக மோடியை தம்பிதுரை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு எளிமையாக நடக்கவில்லை. மிக குறைந்த நேரமே இவர்கள் பேசினார்கள் என்று கூறப்படுகிறது.

எம்பிக்கள்
டெல்லியில் உள்ள லோக்சபா எம்பி ரவீந்திரநாத் என்றாலும் சரி.. அதிமுகவின் மற்ற ராஜ்ய சபா எம்பிக்கள் என்றாலும் சரி.. பிரதமர் மோடிக்கு தனி அன்பு உண்டு. இவர்களிடம் பல மேடைகளில் நட்பாக பேசி இருக்கிறார். இந்த நிலையில்தான் தம்பிதுரையை சந்திக்க மோடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வென்றதற்கு தம்பிதுரை இதில் பிரதமர் மோடியை வாழ்த்தி இருக்கிறார்.
Recommended Video

சீக்ரெட்
அதே சமயம் அதிமுகவில் நடந்த மாற்றங்கள், இரண்டு தரப்பு உறவு, எம்பி ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றியும் தம்பிதுரை பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மீட்டிங்கில் உண்மையில் பேசப்பட்டது என்ன என்பது மட்டும் ரகசியமாக இருக்கிறது. அதோடு அதிமுக மாஜி எம்பிக்கள் வருமானவரித்துறை, சிபிஐ ரெய்டில் சிக்கி இருப்பது பற்றியும் இதில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கலாம். எடப்பாடியின் தூதுவர் தம்பிதுரை செயல்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications