"ஆபத்து".. அண்ணாமலை அனுப்பிய மெசேஜ்! இதுதான் அதிகாரபூர்வம்.. ஆளுநர் ரவி டெல்லி செல்வது ஏன்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு ஆளுனர் ரவி இன்று டெல்லி செல்கிறார். இவரின் இன்றைய டெல்லி பயணத்திற்கும் கடந்த டெல்லி பயணத்திற்கும் இடையில் சில தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மொத்தமாக தென்னிந்திய அரசியல் நிலவரங்கள் சிலவற்றை பற்றியும் ஆளுனர் ரவி டெல்லியில் பேச இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    ஆளுநர் கான்வாய் தாக்கப்பட்டதா? Governor RN Ravi டெல்லி செல்வது ஏன்? பின்னணி

    தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று சிதம்பரத்தில் தருமபுரம் ஆதீனத்தில் ஞானரத்தை துவக்கி வைத்தார். அங்கிருந்து தெலுங்கானா செல்லும் ஞானரத்தை துவக்கி வைத்த அவர், ஆதீனத்தில் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார்.

    ஆளுநரின் இந்த பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. அதோடு அவருக்கு எதிராக மயிலாடுதுறையில் திமுக கூட்டணி கட்சிகளும், திவிக, திகவும் கடுமையாக போராட்டம் செய்தன.

    கல்வீச்சு இல்லை

    கல்வீச்சு இல்லை

    இந்த நிலையில்தான் நேற்று ஆளுநர் கான்வாய் மீது கல் வீச்சு நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்தது. ஆனால் இதற்கான ஆதாரம் இல்லை. அதே சமயம் ஆளுநர் கான்வாயில் கடைசியில் வந்த மூன்று வாகனங்கள் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் தமிழ்நாடு போலீஸ் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. போலீசார் அங்கு இருந்ததால் கல் வீச்சு சம்பவம் தடுக்கப்பட்டது என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

    ஆளுநர் டெல்லி செல்கிறார்

    ஆளுநர் டெல்லி செல்கிறார்

    இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார். ஆளுநரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குறைபாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரின் பாதுகாப்பு பொறுப்பாளர் டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு கடிதம் எழுதி உள்ளார். இதில் ஆளுநரின் தனிப்பட்ட வாகனம் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில்தான் டெல்லி செல்லும் ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    அண்ணாமலை கடிதம்

    அண்ணாமலை கடிதம்

    இந்த நிலையில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, என்ன விதமான அசம்பாவிதம் நடக்க கூடாது என்று நினைத்தோமோ அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. ஆளுநரின் கார் மீது கல்லை வீசி உள்ளனர். கொடி கம்பத்தை வீசி தாக்கி உள்ளனர். ஆளுநர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். ஆளுநரிடம் ஸ்டாலின் இன்றே மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத போகிறேன் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். அதோடு அண்ணாமலை இது தொடர்பாக அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

    விளக்கம்

    விளக்கம்

    இந்த நிலையில்தான் ஆளுனர் ரவி டெல்லிக்கு செல்கிறார். இவர் கண்டிப்பாக தனது பயணத்தின் போது நடந்த விஷயங்களை டெல்லி தரப்பிடம் விளக்கமாக கூறுவார் என்று கூறப்படுகிறது. அதோடு நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு, எதிர்ப்பு பற்றியும் ஆளுநர் ரவி டெல்லியில் பேச போகிறார் என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது தொடர்பாகவும் ஆளுநர் ரவி டெல்லியில் பேச வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    திட்டம் இருந்தது - ஆனால் அவசரம்

    திட்டம் இருந்தது - ஆனால் அவசரம்

    இந்த பயணம் திடீரென திட்டமிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. முன்பே ஆளுநர் இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் பயணம் இருந்துள்ளதாகவும், ஆனால் தேதி குறிப்பிடப்படவில்லை. இப்போது நடந்த சில விஷயங்களால் இரண்டாவது பயணம் உடனே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்குள் ஆளுநர் இரண்டாவது பயணம் மேற்கொள்கிறார். இதில் முதல் பயணம் அதிகாரபூர்வமானது கிடையாது.

    சந்திக்கவில்லை

    சந்திக்கவில்லை

    அதாவது அது ஆளுநரின் தனிப்பட்ட பயணம் என்று கூறப்படுகிறது. அப்போது ஆளுனர் ரவி யாரையும் பெரிதாக சந்திக்கவில்லை. சந்திப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இந்த இரண்டாவது பயணம்தான் அதிகாரபூர்வமாக தலைவர்களை சந்திக்கும் பயணம் என்கிறார்கள். இந்த பயணத்தில் மொத்தமாக தென்னிந்தியா பாதுகாப்பு விவகாரங்கள் பற்றியும் அவர் பேச போகிறார் என்கிறார்கள். இவர் முன்னாள் ஐபி நிர்வாகி.

    தென்னிந்திய ரிப்போர்ட்

    தென்னிந்திய ரிப்போர்ட்

    இதனால் பாதுகாப்பு தொடர்பாக சில விஷயங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அவர் பேசுவார். அதோடு மொத்தமாக தென்னிந்திய அரசியல் நிலவரங்கள் சிலவற்றை பற்றியும் ஆளுனர் ரவி டெல்லியில் பேச இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கானாவில் நிலவும் ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பு, புதுச்சேரியில் நிலவும் அரசியல் பிரச்சனைகள், தமிழக பாஜக குறித்த சில விஷயங்களை ஆளுனர் ரவி பேச போவதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+