Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் இன்று முதல் இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது.. பங்கிற்குள் நுழைந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவிலேயே காற்று மாசுபாடு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது டெல்லிதான். டெல்லியில் சுத்தமாக காற்றுக்காக மக்கள் தவமே இருக்கும் நிலை இருக்கிறது. இதன் காரணமாக தற்போது டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் இன்று முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாகனங்கள் தடையை அமல்படுத்த டெல்லி அரசு, தலைநகர் முழுவதும் கிட்டத்தட்ட 350 பெட்ரோல் பம்புகளில் செய்துள்ள ஏற்பாடுதான் ஆச்சரியமானது.

பல்வேறு நகரங்களில் தூய்மையான தண்ணீர், தூய்மையான வசிப்பிடம் இல்லாமல் பார்த்திருப்பீர்கள்.. ஆனால் இந்தியாவில் தூய்மையான காற்று இல்லாமல் மக்கள் அவதிப்படும் நகரமாக தலைநகர் டெல்லி இருக்கிறது. காற்று மாசுபாடு அபாயக்கட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் இன்று முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Why has Delhi banned fuel sale to old vehicles AI cameras police deployed hundreds already seized

350 பெட்ரோல் பங்குகள்

இந்த தடை உத்தரவை அமல்படுத்தும் விதத்தை கட்டால் திகைத்து போவீர்கள்.. ஏனெனில் டெல்லியில் போக்குவரத்து போலீசார் எங்காவது வாகன சோதனை பழைய வாகனங்களை பிடிப்பார்கள் என்று நினைத்தால், அதிரடியாக பெட்ரோல் பங்கிலேயே கை வைத்திருக்கிறார்கள். டெல்லியில் 350 பெட்ரோல் பங்கில் போலீசார், மாநகராட்சி அதிகாரி, போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீஸ் ஆகிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

காலை 6மணிக்கே வந்த போலீஸ்

இதுபோக வாகனங்களின் RC-புக்கை சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 350 பெட்ரோல் பம்புகளில் தானியங்கி எண் தகடு ரீடர் கேமராக்கள் (ANPR) நிறுவப்பட்டுள்ளது. இது பழைய வாகனங்கள் வந்தால், ஒலி எழுப்பி காட்டிக் கொடுத்துவிடும். உடனே அந்த வாகன ஓட்டியை பிடித்துவிடுவார்கள். இன்று மட்டும் 100க்கணக்கான பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனையை காலை 6 மணி முதலே பெட்ரோல் பங்குகளில் தொடங்கிவிட்டது.

குழு வந்துள்ளது

தெற்கு டெல்லியில் உள்ள பல்வேறு பெட்ரோல் பம்புகளில் போக்குவரத்துத் துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் பல குழுக்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது. சிராக் டெல்லியின் திங்ரா பெட்ரோல் பம்பில், போக்குவரத்து அமலாக்கப் பிரிவு மற்றும் டெல்லி போக்குவரத்து போலீசார் அதிகாலையிலேயே நின்றிருந்தார்கள்.

எப்படி கண்டுபிடிக்கிறார்கள்

போக்குவரத்து அமலாக்கக் குழுவின் துணை ஆய்வாளர் தரம்வீர் இதுபற்றி கூறும் போது, "பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அனுமதி இல்லை என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் காலை 6 மணி முதல் இங்கு நின்று கொண்டு இருக்கிறோம். பெட்ரோல் பம்புகள் அத்தகைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். பழைய வாகனங்களை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கேமராக்கள் மற்றும் தானியங்கி ஹூட்டர் அமைப்புகளும் பம்பில் நிறுவப்பட்டிருக்கிறது. எனவே பழைய வாகனம் ஏதேனும் வந்தால், கேமராக்கள் அதை உடனடியாகக் கண்டறிந்து, ஊழியர்களை எச்சரிக்க ஒரு சத்தத்தை எழுப்பி காட்டி கொடுத்துவிடும். வாகனங்களை அந்த இடத்திலேயே நாங்கள் பறிமுதல் செய்கிறோம் என்றார்.

டெல்லி போலீஸ் விளக்கம்

டெல்லி போக்குவரத்து போலீஸில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் லால் கூறுகையில், "கேமராக்கள் தானாகவே எங்களுக்கு வாகனங்கள் எந்த ஆண்டு என்பது குறித்து தகவல்களைத் தெரிவிக்கும். நாங்களும் வாகன விவரங்களைச் சரிபார்த்து வைத்திருக்கிறோம். அதை வைத்தும் தனிப்பட்ட முறையில் சோதித்து நடவடிக்கை எடுக்கிறோம். போக்குவரத்து போலீஸார், காவலர்கள்,மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது" என்றார்.

திங்ரா பெட்ரோல் பங்கின் ஊழியர் ஹிருதய் ராம் கூறும் போது, "பழைய வாகனங்களில் எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். கேமரா மூலமோ, அல்லது நாங்களே கண்டுபிடித்தாலோ, உடனடியாக காவல்துறைக்கு உடனே எச்சரிக்கை விடுக்கிறோம்" என்று கூறினார். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு இந்த நடவடிக்களை இனி தினமும் தொடரும் என தெரிகிறது. அதேநேரம் தினமும் போலீசார் நின்று இப்படி தீவிரமாக சோதிப்பது சவலானது.எனவே தான் பெட்ரால் பங்கில் பழைய வாகனங்களை கண்டுபிடிக்க சிஸ்டம் வைத்திருக்கிறார்கள். இது முறையாக அமல்படுத்தப்பட்டால் டெல்லியில் பழைய வாகனங்கள் காயிலாங் கடைக்குத்தான் போக வேண்டிய நிலை உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+