"இட்லி - தோசை - புட்டு".. தென்இந்திய உணவுக்கு மட்டும் ஜிஎஸ்டி.. சப்பாத்திக்கு விலக்கு.. சர்ச்சை
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் உள்பட பிற தென்இந்திய உணவுகளுக்கு விலக்கு அளிக்கப்படாமல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்வது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. 5 சதவீதம், 12 சதவீதம் 18 சதவீதம், 28 சதவீதம் என்று 4 அடுக்குகளாக பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தீபாவளி போனஸாக இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் கூறினார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விதிப்பு முறை கைவிடப்பட்டது. அதுமட்டுமின்றி பல பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் அனைத்து செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வர உள்ளன.
சப்பாத்தி - பரோட்டாவுக்கு விலக்கு
மேலும் ஜிஎஸ்டி மாற்றங்கள் பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். அதன்படி பல்வேறு உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி பிளேன் ரொட்டி, சப்பாத்தி, ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், யுஎச்டி பால், பீட்சா, பிரட், ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டது.
இட்லி - தோசைக்கு 5 சதவீத வரி
அதேவேளையில் தென்இந்தியாவில் முக்கிய உணவுகளாக இருக்கும் இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி அப்படியே உள்ளது. நீக்கம் செய்யப்படவில்லை. இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பாக்கெட் மாவு விற்பனைக்கான ஜிஎஸ்டி 18 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்இந்திய உணவு மட்டும் தான் குறியா?
அதுமட்டுமின்றி, தென்இந்திய உணவுக்கு மட்டும் ஜிஎஸ்டியா? என்று தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, சர்ச்சையை கிளப்பி உள்ளது. தென் இந்திய உணவு வகைகளை குறிவைத்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா? என்று வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ரெஸ்டாரண்ட் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவு சரியா? என கேள்வி எழுப்பி உள்னர். பொதுமக்களின் தினசரி உணவின் மீதான வரி விதிப்பில் பாரபட்சம் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கிளம்பிய எதிர்ப்பு
இதுபற்றி சென்னை ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‛‛இட்லி, தோசைக்கு ஜிஎஸ்டியில் வரி விலக்கு அளிக்கப்படவில்லை. இது பாரபட்சமான முடிவாகும். வடமாநிலங்களில் எப்படி சப்பாத்தி தினசரி உணவாக இருக்கிறதோ.. அதேபோல் தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் இட்லி, தோசை முக்கிய உணவாக உள்ளது.
இப்படி இருக்கும்போது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு இடையே ஜிஎஸ்டியில் வேறுபாடு காட்டியது ஏன்? என்று தெரியவில்லை. அதேபோல் பாக்கெட் மாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. இது அதனை சார்ந்து இருக்கும் விற்பனையாளர்களுக்கு பிரச்சனையாக மாறும்'' என்று கூறினார்.
தெளிவில்லை என குற்றச்சாட்டு
மேலும் ஜிஎஸ்டி எக்ஸ்பர்ட் ஒருவர் கூறுகையில்,‛‛ நாங்கள் ஜிஎஸ்டி திருத்தத்துக்காக காத்திருந்தோம். பிரஸ் ரிலீஸில் தெளிவு இல்லை. குழப்பம் இருக்கிறது. இன்னும் மாற்றங்கள் வரும் என்று விரும்புகிறோம்'' என்றார்.
சிலிண்டர் பிரச்சனை
இதுதொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு கூறுகையில், ‛‛இனிப்புகள் மற்றும் சுவையூட்டி உற்பத்தியாளர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. மாறாக சமையல் எரிவாயு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
UHT பால், பனீர் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களின் அதிகரிப்பை வரவேற்கிறோம்'' என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications