அடாவடி பாகிஸ்தான்.. பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா அந்நாட்டை ஏன் நம்புவதில்லை தெரியுமா? காரணம் இதுதான்!
டெல்லி: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானை நம்புவதுமில்லை, அதன் ஒத்துழைப்பை எதிர்பார்த்திருப்பதுமில்லை. தற்போது பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எடுத்து வரும் பல அதிரடி பதிலடி நடவடிக்கைக்கு இதுவும் காரணமாகும்.
இந்தியாவின் நடவடிக்கைகளை சர்வதேச விதி மீறில் என்று குறை கூறும் பாகிஸ்தான், கடந்த காலங்களில் எப்படி இருந்தது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

பாகிஸ்தானின் கொள்கையே முதலில் மறுப்பதும், பின்னர் ஏற்றுக்கொள்வதும் தான். இதனை அந்நாட்டின் முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி, "எங்கள் நாடு கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்திருந்து. அதனால் நாங்கள் பல பாடங்களை கற்றுக்கொண்டோம்" என்று கூறியிருக்கிறார்.
அதேபோல தற்போதை பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், "கடந்த 30 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளுக்காக நாங்கள் மிகவும் கீழ்தரமான வேலைகளை செய்தோம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்காக நாங்கள் இதை செய்தோம். ஆனால் அந்த தவறுகளால் நாங்கள் பாதிப்பையும் எதிர்கொண்டோம்" எனறு கூறியிருக்கிறார்.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் ஈடுபட்டிருந்த அஜ்மல் காசாப் உயிருடன் பிடிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. ஆனால் பாக். அதை அப்படியே மறுத்தது. பின்னர் இந்தியாவின் கூற்று உண்மை என்று ஏற்றுக்கொண்டது.
அதற்கும் முன்னர் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கு இருந்தது. ஆனால், காஷ்மீர் பிரிவினைவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் சாதித்தது. பின்னர் போரின் போது அதிபராக இருந்த முஷாரஃப், ஓய்வு பெற்றதையடுத்து எழுதிய புத்தகத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக போரில் ஈடுபட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இப்படியாக பூனைக்குட்டி வெளியில் வந்தது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசியம் முனீர், "கார்கில் போரில் பாகிஸ்தான் வீரர்கள் செய்தது தியாகம்" என்று கூறியிருந்தார்.
ஒசாமா பில்டேன் விஷயத்திலும் அதுதான் நடந்தது. கடந்த 2011ம் ஆண்டு பின்லேடனை அமெரிக்கா போட்டு தள்ளியது. அப்போது பில்லேடன் பாகிஸ்தானுக்குள்தான் இருந்தார். ஆனால் இவர் எங்கள் நாட்டிற்குள்தான் இருந்தால் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவே இல்லை. பின்னர்தான் ஒப்புக்கொண்டது.
ஆக பாகிஸ்தானிடம் நேர்மையான விசாரணைக்கு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, பாக் விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த தடை உள்ளிட்டவை இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளாகும். ஆனால் பாகிஸ்தான் இதனை ஒருதலைப்பட்சமான செயல் என்றும், சர்வதேச விதி மீறல் எனவும் புலம்பியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications