"இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தவறு!" ஐநாவில் தீர்மானத்திற்கு முதல்முறையாக ஆதரவாக வாக்களித்த இந்தியா! பின்னணி
டெல்லி: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சண்டை தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக். 7ஆம் தேதி தொடங்கிய மோதல் ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்திய நிலையில், இஸ்ரேல் அதற்குத் தீவிர பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

காசா மீது முழு வீச்சில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அடுத்துப் படையெடுப்பையும் ஆரம்பித்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.
ஐநா தீர்மானம்: இப்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஐநாவிலும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி கடந்த அக். 28ஆம் தேதி ஐநா பொது சபையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் ஒன்று ஐநா பொதுச் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்தன. இருப்பினும், அமெரிக்கா, இந்தியா, கனடா உள்ளிட்ட 45 நாடுகள் இந்த தீர்மானத்தைப் புறக்கணித்தன.
இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தியா போர் நிறுத்தத்தை ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டனர். இந்தியா தனது நிலைப்பாட்டிற்கு அப்போதே விளக்கமளித்திருந்தது. அதாவது கடந்த அக். 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் எந்தவொரு கருத்தும் இல்லை என்று இந்தியா கூறியது. மேலும், ஹமாஸ் என்ற வார்த்தையே அதில் இல்லை என்றும் இதுவே தீர்மானத்தைப் புறக்கணிக்கக் காரணம் என்றும் இந்தியா கூறியிருந்தது.
இந்தியா ஆதரவு: இதற்கிடையே ஐநாவில் பொதுச் சபையில் மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கும் வகையில் ஐநா இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தது. கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலான் பகுதியிலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
முதல்முறை: இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் வகையில் வாக்களித்தது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே யுத்தம் தொடங்கிய பிறகு, இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுப்பது இதுவே முதல்முறையாகும். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 145 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 நாடுகள் வழக்கம் போல எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன..
ஏன் முக்கியம்: ஐநா சபையில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள இந்த நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை இந்தியா கண்டித்தாலும் கூட அங்கே இஸ்ரேல் பாலஸ்தீனம் என இரு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையையே இந்தியா எடுத்துள்ளது. இஸ்ரேல் தனிநாடாக அறிவிக்கப்பட்ட போது உடனடியாக அதை அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த போதிலும், தூதரக உறவுகள் கடந்த 1992இல் தான் தொடங்கியது.

அதன் பிறகும் கூட பெரியளவில் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கம் ஏற்படவில்லை. கடந்த 2014க்கு பிறகே இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. கடந்த 2017இல் பிரதமர் மோடி டெல் அவிவ் நகருக்குச் சென்றார். இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது அதுவே முதல்முறையாகும்.
இந்தியா நிலைப்பாடு: கடந்த அக். 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, ஹமாஸ் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார். அதை "பயங்கரவாத" நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். பிரதமரின் அந்த பேச்சில் பாலஸ்தீனம் குறித்து எந்தவொரு தகவல்களும் இல்லை. இரு தரப்பிற்கும் இடையே சண்டை தொடர்ந்த நிலையில், இந்தியா நடுநிலை நிலைப்பாட்டிற்கு வந்தது. இந்தச் சூழலில் தான் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா இப்போது வாக்களித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications