நீங்க எப்போ டாப் பணக்காரர் ஆவீங்க! நெட்டிசன் கேள்விக்கு ஓப்பனாக பதில் சொன்ன ஆனந்த் மகேந்திரா! அடடே
டெல்லி: தொழிலதிபர் ஆனந்த மகேந்திராவிடம் நெட்டிசன் ருவர் நீங்கள் எப்போது நம்பர் 1 இந்தியப் பணக்காரராக வருவீர்கள் எனக் கேட்க, அதற்கு அவர் கொடுத்த பதில் பலரையும் கவர்ந்துள்ளது.
நமது நாட்டில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆனந்த் மகேந்திரா. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள தொழிலதிபர்களில் ஒருவர் இவர். தொடர்ந்து பல விஷங்களை தனது ட்விட்டரில் இவர் பகிர்ந்து வருகிறார்.
மேலும், தனக்குப் பிடித்த மற்றும் மனதைக் கவரும் விஷயங்களையும் ட்விட்டரில் பகிர்ந்து மனதார பாராட்டுவார். இதற்காகவே இவரது ட்விட்டரில் இவருக்குத் தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

ஆனந்த் மகேந்திரா
நமது நாட்டில் டிராக்டர்கள் என்றாலே மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தினுடையது தான். இன்னுமே கூட கிராமங்களில் பெரும்பாலும் இருப்பது மகேந்திர டிராக்டர்கள் தான். இந்தியாவில் இன்னுமே பெரும்பாலான வயல்களில் இருப்பது மகேந்திரா டிராக்டர்கள் தான். ஒட்டுமொத்தமாகவே அந்த துறை மகேந்திரா கையில் தான் உள்ளது. அதேபோல மகேந்திரா நிறுவனத்தின் ஜீப்களுக்கும் தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதைத் தாண்டியும் கூட அவர்கள் தங்கள் இருப்பை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

டாப் பணக்கார்கள்
அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களின் சில கார்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல டெக் மகேந்திரா என்ற ஐடி நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். அதிலும் கூட நல்ல லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர மகேந்திர ஹாலிடேஸ், மகேந்திர லைஃப் ஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். இப்படி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தாலும், ஆனந்த் மகேந்திரா டாப் பணக்காரர்கள் வரிசையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

கேள்வி
அவர் டாப் 10 இடங்களில் கூட இல்லை. அவ்வளவு ஏன் 50 இடங்களுக்குள் கூட இல்லை. இதற்கிடையே நெட்டிசன் ஒருவர் இது தொடர்பாக அவரை டேக் செய்து கேள்வி கேட்டிருந்தார்.. அதாவது, "நீங்கள் இப்போது இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 73ஆவது இடத்தில் உள்ளீர்கள். எப்போது நீங்கள் நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு வருவீர்கள்?" என்று டேக் செய்து கேட்டுள்ளார். இதற்கு ஆனந்த் மகேந்திர அளித்த பதில் தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

முதலிடம் எப்போது
இதற்கு இந்தியில் பதிலளித்துள்ள ஆனந்த் மகேந்திரா, "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் எப்போதும் முதல் இடத்திற்கு வர மாட்டேன். ஏனென்றால் ஒரு நாளும் எனது ஆசையாக இருந்தது இல்லை" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகேந்திராவின் இந்த பதில் நெட்டிசன்களை பலரையும் கவர்ந்துள்ளது. பணத்தை மட்டுமே சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக வைத்துக் கொள்ளாமல், பிடித்ததைச் செய்ய வேண்டும் என்று ஆனந்த் மகேந்திரா செயல்பட்டு வருவதே அவரை இந்தளவுக்கு உயரத்தில் கூட்டிச் சென்றுள்ளது.

நெட்டிசன்கள்
இதற்காக அவரை ட்விட்டரில் பலரும் பாராட்டி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், "நீங்கள் ஏற்கனவே டாப் லிஸ்டில் தான் உள்ளீர்கள். சிந்தனை, மனிதநேயம், மரியாதை, தேசிய பற்று, எளிமை என அனைத்திலும் நீங்கள் தான் டாப் லிஸ்டில் உள்ளீர்கள்" என ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொருவர், "நம்மிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பது லிஸ்டில் டாப் இடத்திற்குக் கொண்டு வராது. நமக்கு இருக்கும் மரியாதையே நம்மை டாப் லிஸ்டிற்கு கொண்டு வரும்.. அந்த வகையில் நீங்கள் மற்ற அனைவரையும் தாண்டி டாப் இடத்தில் உள்ளீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிக பாலோயர்ஸ்கள்
இந்தியாவில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட தொழிலதிபர்களில் ஒருவராக ஆனந்த் மகேந்திரா உள்ளார். கடந்த வாரம் தான் இவரைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தூங்குவதற்கான மருந்து எனக் கூறி ஆனந்த் மகேந்திரா தனது மனைவி அளித்த மருத்துவ குறிப்பு போல ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் மொபைல் மற்றும் கணினியைத் தூக்கிப்போட்டாலே தூக்கம் தானாக வரும் என இருந்தது. இந்த போஸ்டும் நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications