டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#FinanceMinisterMissing திடீரென டிரெண்டாக்குவது ஏன்? கதறியபடி நெட்டிசன்கள் வெளியிட்ட டுவிட்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    #FinanceMinisterMissing திடீரென டிரெண்டாகுவது ஏன்?.. கதறியபடி நெட்டிசன்கள் வெளியிட்ட டுவிட்கள்

    டெல்லி: 2018-2019ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, வருமான வரி படிவத்துடன் தாக்கல் செய்தவற்காக காலக்கெடு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

    ஆனால் இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்காத நிலையில் நிதியமைச்சரை காணவில்லை #FinanceMinisterMissing #TaxAuditExtendToday என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

    2018-2019ம் ஆண்டில் வருமானம் ஈட்டிய வியாபரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் வருமான வரி படிவத்துடன் தணிக்கை செய்யப்பட்ட வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். அப்படி தணிக்கை செய்யப்பட்ட வரிகணக்கை தாக்கல் செய்யாவிட்டால் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். வட்டி மற்றும அபராதம் போன்றவற்றையும் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

    கர்நாடகாவில் நடைபெறவிருந்த 15 தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி.. காரணம் இதுதான்கர்நாடகாவில் நடைபெறவிருந்த 15 தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி.. காரணம் இதுதான்

    3 வருசமாக கொடுத்தாங்க

    3 வருசமாக கொடுத்தாங்க

    இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வருமான வரி கணக்கை தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுடன் வியாபாரிகள் தாக்கல் செய்ய காலநீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் இந்த ஆண்டும் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    டுவிட்டரில் டிரெண்டிங்

    டுவிட்டரில் டிரெண்டிங்

    இதற்காகத்தான் தான் நெட்டிசன்கள் பலரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்காத நிலையில் நிதியமைச்சரை காணவில்லை #FinanceMinisterMissing #TaxAuditExtendToday என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

    நிர்மலா வேண்டாம்

    சிலர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் பியூஸ் கோயல் சில நாட்களுக்காவது நிதியமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடியையும் தங்கள் டுவிட்டரில் டேக் செய்துள்ளனர்.

    நிர்மலாவின் தந்திரம்

    இன்னொருவர் தேதி நீட்டிக்கப்படாது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கார்ப்பரேட் வரியைக் குறைந்த நிர்மலா சீதாராமன், நிதியை சமநிலைப்படுத்ததுவதற்காக கார்ப்பரேட்களிடம் இருந்து தாமத கட்டணம் மற்றும் அபராதம் வசூலிப்பதற்கான நிர்மலா சீதாராமனின் தந்திரமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

    நேரத்தை வீணடிக்காதீர்

    நெட்டிசன் ஒருவர் எதற்காக நிர்மலா சீதாராமனிடமும், வரிகள் ஆணையத்திடம் வரி கணக்கை தாக்கல் செய்ய கெஞ்சி கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தை நாடுங்கள். நேரத்தை வீணடிக்காமல் நீதிமன்றம் செல்லுங்கள் என கூறியுள்ளார். அவர் தனது பதிவில். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்த ஒரு டுவிட்டை ஷேர் செய்து பதிவிட்டு இருந்தார்.

    இன்னும் பல டுவிட்கள் வெளியாகி இருக்கின்றன.அவற்றில் சில உங்களின் பார்வைக்கு..

    English summary
    Why is #FinanceMinisterMissing trending on Twitter? , because Tax Audit due date not extented:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X