சிவப்பு எறும்புகள் + மிளகாய் + இஞ்சி.. இந்திய "காய்" சட்னிக்கு சர்வதேச அங்கீகாரம்! நன்மைகள் என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பூச்சிகளைச் சாப்பிடுவது என்பது நமக்கு ரொம்பவே வினோதமான ஒன்றாகத் தோன்றலாம்.. ஆனால், இந்தியாவிலேயே பல சமூகங்கள் பூச்சிகளைச் சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அதற்கு இப்போது அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

உலகெங்கும் உள்ள பல்வேறு சமூகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பூச்சிகள் என்பது முக்கிய உணவாகவே இருந்துள்ளது. இது எங்கோ இருக்கும் இந்தோனேசியா அல்லது மலேசியா போன்ற நாடுகளில் மட்டும் இருப்பவை இல்லை. நமது ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கூட இந்த பழக்கம் இருக்கிறது.

 Why it is impt that Odishas red ant chutney gets GI tag

சிவப்பு எறும்பு சட்னி: அங்குள்ள ஒரு வகை சிவப்பு எறும்புகளை இவர்கள் இப்படி சட்னியாக அரைக்கிறார்கள். Red weaver ants என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வகை எறும்புகளைக் கொண்டு தான் எறும்புகள் சட்னி அரைக்கிறார்கள். இதை "காய் சட்னி" என்றும் கூறுகிறார்கள். இந்த சட்னி அரை-திடமான பேஸ்ட் போல அரைக்கப்படும்.

இந்த சட்னி அதன் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து குணங்களுக்காக அப்பகுதியில் புகழ் பெற்றது. இதற்கிடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனித்துவமான சுவையைத் தரும் இந்த சட்னிக்கு கடந்த ஜனவரி 2ஆம் தேதி ஜிஐ எனப்படும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

கடித்தால் ஆபத்து: இந்த சிவப்பு எறும்புகளின் சயினிட்டிபிக் பெயர் ஓகோபில்லா ஸ்மரக்டினா என்பதாகும்.. இவை கடித்தால் அந்த இடத்தில் ஊசியால் குத்தப்பட்டதை போல வலி மிகக் கடுமையாக இருக்கும். மேலும், அவை தோலில் அதிகப்படியான கொப்புளங்களையும் ஏற்படுத்தும் திறன் கொண்டவை. இந்த எறும்புகள் பொதுவாக சிமிலிபால் உட்பட மயூர்பஞ்ச் காட்டுப் பகுதிகளில் காணப்படும்.

இந்த ஊட்டச்சத்தை மட்டும் தருவதில்லை. இது இங்குள்ள நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. இந்த எறும்புகளைப் பிடித்தும், அதில் சட்னி செய்து விற்பனை செய்தும் கூட பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். பொதுவாக இந்த எறும்புகள் மற்றும் அவற்றின் முட்டைகள் அதன் கூடுகளிலிருந்து சேகரிக்கப்படுகிறது.

சத்துக்கள்: எறும்புடன் சேர்ந்து உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றைச் சேர்ந்து அரைத்து இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது. ஒடிசா மட்டுமின்றி இந்த சிவப்பு எறும்பு சட்னிகளை ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற கிழக்கு மாநிலங்களிலும் நாம் பார்க்கலாம். கலாச்சார ரீதியாகவும் இந்த எறும்பு சட்னி ஒடிசா பழங்குடியினருடன் நல்ல பிணைப்பைக் கொண்டுள்ளது. இந்த சிவப்பு எறும்பு சட்னி மூலம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும்..

இந்த எறும்பு சட்னியில் புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி-12, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தனித்துவமான சட்னி நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகிறது. மேலும், மனச்சோர்வு, மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகிய பாதிப்புகளையும் கட்டுப்படுத்த உதவும்.

உடலுக்கு நல்லது: எறும்புகள் உள்ளிட்ட பூச்சிகளை நாம் சாப்பிடுவது உடலுக்குப் புரதத்தைத் தரும். பருவநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் நிலையில், பூச்சிகளை நமது உணவில் சேர்ப்பது நமது உடலுக்கு மட்டுமின்றி பூமிக்கும் நன்மையைக் கொடுக்கும். ஏனென்றால் இப்போது உலகெங்கும் புரத தேவைக்கு மாடுகள் மற்றும் சிக்கனை தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்.

ஆனால், இவை பூமியை வெப்பாக்கும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற க்ரீன் ஹவுஸ் வாயுக்களை அதிகம் வெளியிடும். இது புவி வெப்ப மயமாதலுக்குக் காரணமாக இருக்கும். எனவே, புரத தேவைக்கு நாம் பூச்சிகள் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கலாம். இது உடலுக்கு மட்டுமின்றி பூமிக்கும் நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+