"வழக்கு பதிய ஏன் தாமதம்?" நாட்டை உலுக்கிய மணிப்பூர் கொடூரம்! சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சரமாரியாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சில காலமாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கே ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 Why long delay to file FIR Supreme court questions Police action in Manipur violence

இதற்கிடையே அங்கு நடந்த மிக மோசமான சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அதில் அங்குள்ள பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மணிப்பூர் பலாத்கார வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் பலாத்காரம் விவகாரத்தில் வழக்குப் பதிய ஏன் தாமதம்? என்று கேள்வி எழுப்பிய சுப்பீரம் கோர்ட், மணிப்பூர்- பாதிக்கப்பட்டோருக்குச் சட்ட உதவிகள் வழங்கப்பட்டதா? என்றும் மணிப்பூரில் அமைதி இன்னமும் திரும்பாதது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+