Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்றத்தில் கலாய்த்த மோடி.. நேரு குடும்பத்துக்கு காந்தி பெயர் ஏன்? இப்படி இரு காரணம் இருக்கா

நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் காந்தியின் பெயரை பயன்படுத்துவது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் பேசியது ஏன்? என்று பார்ப்போம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் காந்தியின் பெயரை பயன்படுத்துவது ஏன்? என்று கேட்க அவையில் பாஜக எம்பிக்கள் வாய்விட்டு சிரித்தனர். சமூக வலைதளங்களிலும் பலர் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். காந்தி என்று நேருக்கு குடும்பத்தினர் தங்கள் பெயருக்கு பின் சேர்ப்பதற்கு காரணம் உள்ளது. அதை விரிவாக பார்ப்போம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2023 - 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

மக்களவையில் பேசிய மோடி

மக்களவையில் பேசிய மோடி

காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர் அதானி விவகாரம் குறித்தும் பிரதமருடன் அதானிக்கு உள்ள தொடர்பு பற்றியும் பேசினர். இதையடுத்து நேற்று முந்தினம் மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியையும் அதன் ஆட்சிகாலத்தையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

நேரு குடும்பம்

நேரு குடும்பம்

இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாங்கள் நேருவின் பெயரை குறிப்பிட மறந்தால் காங்கிரஸ் கட்சியினர் ஆதங்கப்படுகிறார்கள். நேரு சிறந்த மனிதர் என்றால், அவரது பெயரை ஏன் குடும்பப் பெயராக வைக்காமல் காந்தி பெயரை ஏன் வைக்கிறீர்கள். அதை பயன்படுத்துவதில் என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பினார்.

 காந்தி பெயர் ஏன்?

காந்தி பெயர் ஏன்?

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள் மகாத்மா காந்திபோல் நேருவும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் என்றால் அவரது பெயரை பயன்படுத்த வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால், ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பயன்படுத்துவது மகாத்மா காந்தியின் பெயர் கிடையாது.

பெரோஸ் காந்தி

பெரோஸ் காந்தி

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திராவுக்கும், பார்சி சமுதாயத்தை சேர்ந்த பெரோஸ் காந்திக்கும் தேச விடுதலைக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்றுவிட்டது. பெரோஸின் பெயருக்கு பின்னால் இருக்கும் காந்தி என்பது அவரது குடும்ப பெயராகும். அவரை திருமணம் செய்த பிறகு வட இந்தியர்களின் வழக்கப்படி காந்தி என்ற பெயர் இந்திராவுக்கு பின்னால் சேர்ந்துவிட்டது.

ராஜீவ், சஞ்சய் காந்தி

ராஜீவ், சஞ்சய் காந்தி

இதனால் அவரது மகன்களான முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் மற்றும் சஞ்சய் ஆகியோரது பெயர்களுக்கு பின்னாலும் காந்தி என்ற குடும்ப பெயரை சேர்த்தே அழைத்தார்கள். எனவே ராஜீவ் காந்தி சோனியாவை திருமணம் செய்த பிறகு அவரது பெயருக்கு பிறகு காந்தி சேர்ந்துகொண்டது. அவரது குழந்தைகளாக ராகுல், பிரியங்கா ஆகியோரது பெயர்களுக்கு பின்னும் காந்தி என்ற பெயர் சேர்ந்தது.

கணவரின் குடும்ப பெயர்

கணவரின் குடும்ப பெயர்

அதேபோல் சஞ்சை காந்தியின் மனைவியான முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான மேனகா காந்தி, அவரது மகன் வருண் காந்தி ஆகியோர் பின்னாலும் இந்த பெயர் வந்தது. எனவே வட இந்தியர்களின் வழிமுறைப்படி கணவரின் குடும்ப பெயர் சேர்ந்ததால்தான் காந்தி என்ற பெயர் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயருக்கு பின்னாள் வருகிறது.

பிரியங்கா காந்திக்கு பின் வரும் வத்ரா

பிரியங்கா காந்திக்கு பின் வரும் வத்ரா

அதன் அடிப்படையில்தான் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி ராபர் வத்ராவை திருமணம் செய்த பிறகு தனது பெயருக்கு பின்னால், பிரியங்கா காந்தி வத்ரா என்று சேர்த்துக்கொண்டார். அவரது குழந்தைகளின் பெயருக்கு பின்னால் காந்தி வரவில்லை. மிராயா வத்ரா, ரைஹான் வத்ரா என்றே வருகிறது. இதேபோல்தான் ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலாவும், திருமணத்துக்கு பிறகு கமலா நேரு என்றே அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+