மன அழுத்தம் பற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு ஏன் முக்கியம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மன அழுத்தம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறிய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. மாணவர் நலனுக்கான அக்கறையில் அவர் கூறிய கருத்துக்கள் தவறாக பரப்பப்பட்டு வருகின்றன. எந்தவொரு தனிநபரையோ அல்லது அமைப்பையோ குறை கூறாமல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் பேசிய விஷயங்கள் அப்படியே மாற்றி பரப்பப்பட்டு வருகின்றது.

எர்ன்ஸ்ட் & யங் ஊழியர் அன்னா செபாஸ்டியன் தற்கொலை பற்றி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிக மிக கவனமாக, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசி இருந்தார். மரணம் அடைந்த அந்த ஊழியரின் தனியுரிமைக்கு மதிப்பளித்து யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருந்தார்.

nirmala sitharaman

கல்வி மற்றும் தொழில்முறை அமைப்புகளில் முறையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், மாணவர்களின், ஊழியர்களின் மன வலிமையை மேம்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்தே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருந்தார்.

CA போன்ற தொழில்முறை தேர்வுகளில் இருக்கும் அதீத அழுத்தம், அதனால் ஏற்படும் பணி அழுத்தம், மன அழுத்தம் பற்றியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

கல்வி நிறுவனங்களில் தியான கூடங்களை அமைக்க வேண்டும், வழிபாட்டுத் தலங்களை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்தது மாணவர் நல்வாழ்வை மனதில் வைத்தே பேசப்பட்டது ஆகும். கல்வி வெற்றி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகிய இரண்டை மட்டும் மனதில் வைக்காமல், மன அமைதியையும் மனதில் வைத்து நிதி அமைச்சர் இப்படி பேசி இருந்தார்.

அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் அவர் எர்ன்ஸ்ட் & யங் ஊழியர் தற்கொலை பற்றி கொண்டு இருக்கும் ஆழமான உணர்வுகளையும், அவர் எந்த அளவிற்கு இந்த விஷயம் பற்றி யோசிக்கிறார் என்பதையும் காட்டியது. இளைஞர்கள், பணிக்கு செல்வோர், மாணவர்கள் ஆகியோரின் மன அழுத்தத்தின் மீது கவனம் செலுத்தும் வகையில் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மொத்த பேச்சும் இருந்தது.

சீதாராமனின் கருத்துகளைத் தவறாகப் பேசுவதை ஏன் எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும்:

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நிர்மலா சீதாராமனின் கருத்துகள்: நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனின் கருத்துக்கள் மனநலம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதை பற்றியே இருந்தது. அன்னா செபாஸ்டியன் என்ற தனி நபர் பட்ட கஷ்டத்தை குறைத்து பேசவோ, குற்றஞ்சாட்டவோ நிர்மலா சீதாராமன் நினைக்கவில்லை.

மன அழுத்தத்தை சிறுமைப்படுத்துவது போன்ற செயல்: ஊழியர்களுக்கு நிலவும் மன அழுத்த பிரச்சனைகள் பற்றியே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். ஆனால் அவரின் பேச்சை தவறாக திரித்து விமர்சனம் செய்வது என்பது.. மன அழுத்தம் மீதான முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்துவது போன்று அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் அவரின் பேச்சை தவறாக சித்தரிக்கின்றனர்.

மன அழுத்தத்தை புரிந்து கொண்ட நிர்மலா சீதாராமன்: நிர்மலா சீதாராமன், ஒரு பெண் மற்றும் அரசியல் தலைவராக மக்கள் படும்.. முக்கியமாக பெண் ஊழியர்கள் படும் அழுத்தத்தை உணர கூடியவர். இந்தியாவின் மிக முக்கியமான பெண் அரசியல்வாதிகளில் ஒருவராக இருக்கும் சீதாராமன் தனது பணியில் பெரும் அழுத்தத்தையும் சவால்களையும் தினமும் எதிர்கொள்கிறார். இதேபோன்ற அழுத்தங்களை எதிர்கொள்ளும் மற்றொரு பெண்ணை அவர் குறைத்து மதிப்பிடுவார் என்று கருதுவது நியாயமற்றது. அவரது கருத்துக்கள் மன அழுத்த மேலாண்மை பற்றியதே தவிர தனிநபர்களை விமர்சிக்கும் விதத்தில் அமையவில்லை.

எதில் கவனம் செலுத்த வேண்டும்: அன்னா செபாஸ்டியனின் துயரமான மரணம், மோசமான பணியிட கலாச்சாரங்களை, அங்கே நிலவும் மன அழுத்தத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில்.. அதை பற்றி பேசாமல்.. நிர்மலா சீதாராமனின் கருத்துகளை தவறாக திரித்து பேசுவது என்பது இந்த விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் செயல் ஆகும். பணி சூழலில் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை இது போன்ற திசை திருப்பும் செயல்கள் பாதிக்கின்றன.

மனநலம் குறித்த ஆக்கபூர்வமான உரையாடலை தொடங்க வேண்டும்: மன அழுத்த மேலாண்மையை கல்வி பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியது மிகவும் ஆக்கபூர்வமான பேச்சு.

அவரது கருத்துக்களை விமர்சிப்பது.. உயர் அழுத்த பணி சூழலில் உள்ள உண்மையான பிரச்சினை, மன பிரச்சனைகளை திசை திருப்பும் ஒன்றாக உள்ளது. மன அழுத்தம் பற்றிய அவரின் பேச்சுக்களை விமர்சனம் செய்வது உண்மையான பிரச்சனையில் இருந்து திசை திருப்பும் ஒன்றாக அமைந்து உள்ளது.

முடிவுரை : இந்தியாவின் போட்டி நிறைந்த தொழில்முறை சூழலில்.. மன அழுத்த மேலாண்மை மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை பற்றிய தேவையான உரையாடலைத் தூண்டும் வகையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி உள்ளார். மன அழுத்தம் தொடர்பாக உண்மையான நோக்கத்துடன் சீதாராமனின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. அவரது பேச்சு மீது பழி சுமத்துவதை விட அவர் சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கொண்டு.. அதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதே சிறப்பானதாக இருக்கும். சீர்திருத்தம் பற்றிய அவரின் பேச்சை புரிந்து கொண்டு.. அதை செயல்படுத்த முயல்வதே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+