இந்தியா - சீனா மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை.. மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்
டெல்லி: இந்தியா - சீனா மோதல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுப்பது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்தியா - சீனா பிரச்சினை குறித்து பேசவிடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்ததை அடுத்து, மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து சீனாவுடன் ஏற்பட்டு வரும் எல்லை பிரச்சினை குறித்து அந்நாட்டுடன் இந்தியா எப்போது பேச்சுவார்த்தை நடத்தப் போகிறது என்றும் அவர் வினவியுளார்.

எல்லையில் தொடரும் பதற்றம்
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி சீனப் படையினர் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியை சமாளிக்க முடியாமல் 200-க்கும் மேற்பட்ட சீனப் படையினர் அங்கிருந்து பின்வாங்கினர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இரு நாடுகளும் அருணாச்சல் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இதனால் அருணாச்சலில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

கேள்விகளை அடுக்கும் காங்கிரஸ்
இது ஒருபுறம் இருக்க, இந்தியா - சீனா மோதல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து பல கருத்துகளை கூறி வருகிறது. ராகுல் காந்தி நேற்று பேசும் போது, "இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால் இந்திய அரசாங்கமோ அந்த ஆபத்தை உணராமல் தூங்கிக் கொண்டிருக்கிறது" எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து ராணுவத் தளவாடங்கள நிறுவி வருவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

பேசவிடாமல் தடுத்த பாஜகவினர்
இதனிடையே, அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த இந்தியா - சீனா மோதல் குறித்து நேற்று மாநிங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேச முற்பட்டார். மாநிலங்களவைத் தலைவர் அனுமதித்த போதிலும் அவரை பேச விடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் டோக்லாம் பகுதியில் இருந்து சிலிகுரிக்கு அருகே உள்ள ஜம்பேரி ரிட்ஜ் பகுதி வரை சீனா தனது ராணுவத் துருப்புகளை அளவுக்கு அதிகமாக குவித்து வருகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயம். ஆனால், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச என்னை பாஜகவினர் அனுமதிக்க மறுக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசக் கூடாதா? சீனா உடனான பிரச்சினை கையை மீறி சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுடன் எப்போது இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறது?" என அவர் கேள்வியெழுப்பினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications