Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடியுடன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத ஹீராபென் மோடி! என்ன காரணம்! அவரே சொல்லியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார். பிரதமர் தாயார் என்றாலும் கூட அவர் மோடியுடன் பெரும்பாலும் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கான காரணத்தை மோடியே கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி குஜராத்தில் வசித்து வந்தார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் பிரதமர் மோடி தனது தாயார் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார்.

குஜராத்திற்கு எப்போது சென்றாலும், தனது தாயாரைச் சந்திக்காமல் திரும்ப மாட்டார் பிரதமர் மோடி.. இந்நிலையில் 99 வயதான ஹீராபென் மோடி உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசமடையவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 ஹீராபென் மோடி காலமானார்

ஹீராபென் மோடி காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரைப் பிரதமர் மோடியும் நேரில் சென்று சந்தித்திருந்தார். இந்தச் சூழலில் இன்று அதிகாலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதிகாலை 3.30 மணி அளவில் ஹீராபென் காலமானார். இத்தகவல் கிடைத்தவுடன், பிரதமர் மோடி உடனடியாக டெல்லியில் இருந்து குஜராத் சென்றார். அங்குத் தனது தயார் உடலைச் சுமந்து சென்றார் பிரதமர் மோடி. தாயார் ஹீராபெனின் இறுதிச் சடங்குகளும் இன்று காலையே நடைபெற்றன.

 பொது நிகழ்ச்சிகள்

பொது நிகழ்ச்சிகள்

பிரதமர் மோடி மீது ஹீராபென் மோடிக்கு மிகப் பெரியளவில் அன்பு இருந்தாலும் கூட, மோடியுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கூட ஹீராபென் மோடி கலந்து கொண்டதே இல்லை. இதற்கான காரணத்தைத் தனது தாயாரின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் எழுதிய பிளாக்கிலேயே விளக்கியிருந்தார் பிரதமர் மோடி. அவர் பிரதமராகப் பதவியேற்ற உடன் தனது தாயிடம் வாழ்த்து வாங்கச் சென்றுள்ளார். அப்போது ஹீராபென் மோடி, "உன்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இங்கு எதுவும் நம்முடையது இல்லை. இவை எல்லாம் இறைவனின் திட்டம்" என்று கூறியதாக முன்பு ஒரு நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தாண்டு தொடக்கத்தில் தனது தாயாரின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் தனது தயார் பொது நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொள்ளாதது குறித்து அவர் , "எந்த அரசு அல்லது பொது நிகழ்ச்சிகளுக்கும் எனது தாயார் என்னுடன் வருவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். கடந்த காலங்களில் வெறும் இரண்டு முறை மட்டுமே அவர் என்னுடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஒரு முறை ஏக்தா யாத்திரையை முடித்து, ஸ்ரீநகர் லால் சௌக்கில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, காஷ்மீரில் இருந்து திரும்பிய போது அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எனது தயார் எனது நெற்றியில் திலகத்தை வைத்தார்.

 இரண்டே பேர்

இரண்டே பேர்

அது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.. ஏனென்றால் ஏக்தா யாத்திரையின் போது பக்வாராவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிலர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் என்னை நினைத்து அம்மா மிகவும் கவலைப்பட்டார். அந்த நேரத்தில் உடனடியாக எனக்கு தொலைப்பேசி செய்து நான் நன்றாக இருக்கிறேன் என உறுதி செய்தவர்கள் இரண்டே பேர். ஒருவர் அக்ஷர்தாம் கோயிலின் ஷ்ரதே பிரமுக் சுவாமி, இரண்டாவது எனது அம்மா. நான் நலமாக இருக்கிறேன் என்பதே கேட்டவுடன் தான் அவருக்கு நிம்மதியே வந்தது.

 கடைசி பொது நிகழ்ச்சி

கடைசி பொது நிகழ்ச்சி

இரண்டாவது, 2001இல் குஜராத்தின் முதல்வராக நான் முதன்முதலில் பதவியேற்ற நிகழ்வு.. 20 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த அந்த பதவியேற்பு விழாதான் அம்மா என்னுடன் கலந்துகொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. அதன்பிறகு, அவர் ஒரு பொது நிகழ்ச்சிக்குக் கூட என்னுடன் வந்தது இல்லை. எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றதும் எனது ஆசிரியர்களை அனைவருக்கும் முன்னிலையில் கௌரவிக்க விரும்பினேன்.

மறுத்துவிட்டார்

மறுத்துவிட்டார்

அம்மாதான் என் வாழ்க்கையில் பெரிய ஆசிரியை என்று நினைத்தேன்.. எனவே அவரை கவுரவிக்க வேண்டும் என நினைத்தேன். நம் சாஸ்திரங்கள் கூட ஒருவருடைய தாயை விடப் பெரிய குரு இல்லை என்றே குறிப்பிடுகிறது.. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு என் அம்மாவிடம் நான் கேட்டேன்.. ஆனால் அவர் மறுத்துவிட்டார். நான் கேட்டதற்கு அவர், 'நான் ஒரு சாதாரண மனிதன். நான் உன்னைப் பெற்றெடுத்திருக்கலாம், ஆனால் நீ வல்லவரால் கற்பிக்கப்பட்டவர்.. எனவே நான் இனியும் உன்னுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சரியாக இருக்காது' என்று கூறி மறுத்துவிட்டார். அதன் பிறகு அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவே இல்லை" என்று அதில் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+