ராகுலுக்கு 2 ஆண்டு சிறை ஏன்? குஜராத் கோர்ட்டை கடுமையாக விளாசிய உச்சநீதிமன்றம்! 4 முக்கிய பாயிண்ட்
டெல்லி: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது 4 முக்கிய பாயிண்டுகளை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் குஜராத் நீதிமன்றங்களை கடுமையாக சாடியது. அதன் விபரம் வருமாறு:
2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அம்மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செசன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து ராகுல் காந்தி தனக்கான 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
பிஆர் கவாய், பிஎஸ் நரசிம்மா, சஞ்சய்குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக தொடர உள்ளார். அதோடு இந்த உத்தரவு என்பது ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியினரையும் உற்சாகப்படுத்தி உள்ளது. முன்னதாக இன்றயை வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றத்தை சாடியது.
அதாவது, ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் ஏன் சூரத் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டு சிறையை வழங்கியது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதையும் உச்சநீதிமன்றம் பார்த்தது. அப்போது ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தற்கான சரியான காரணங்கள் இல்லை என கருதிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தனர். இது முதல் பாயிண்டாகும்.
மேலும் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் அவர் தரப்பில் உள்நோக்கம் எதுவுமின்றி பேசியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை வழக்கின் சாட்சிகளும் உறுதி செய்திருப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது. இது ராகுல் காந்திக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இது 2வது பாயிண்டாகும்.
அதோடு சூரத் கீழமை நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ராகுல் தரப்பில் சூரத் செசன்ஸ் நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்திருந்தார். இருப்பினும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இது ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கான 3வது பாயிண்டாகும்.
மேலும் எம்பியாக இருப்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தால் அவரது பதவி காலியாகிவிடும். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் அவரும் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று கூறும்போது, ‛‛ராகுல் காந்திக்கு ஏன் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு நாள் குறைவாக தண்டனை வழங்கப்பட்டு இருந்தால் தகுதி நீக்கம் வந்திருக்காது. மேலும் அவரும் எம்பியாக இருந்திருப்பார். ஆனால் தற்போதைய தகுதி நீக்கத்தால் ராகுல் காந்தி மட்டுமின்றி அவர் எம்பியாக உள்ள தொகுதி (வயநாடு) மக்களுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்த விளக்கம் இல்லை'' என தெரிவித்தது. இது 4வது பாயிண்டாகும்.
இந்த 4 பாயிண்டுகளை குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் குஜராத் நீதிமன்றங்களை சாடியதோடு, ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications