அனைத்தும் டெல்லியில் தான் இருக்க வேண்டுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் சரமாரி கேள்வி
டெல்லி: அனைத்து முக்கிய வேலைகளையும் ஏன் டெல்லியில் இருந்தே மேற்கொள்ள வேண்டும்.. ஏன் இந்த 2025ல் கூட 1950 போல் இந்திய அரசு டெல்லியில் இருந்து செயல்பட வேண்டும்? அதிகப்படியான புகைமூட்டம் உள்ள மாதங்களில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தேவையா என்பதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் பேசினார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. எம்பி வில்சன் நேற்று ராஜ்யசபாவில் பேசுகையில், "மாசுபாடு என்பது இனி ஒரு சட்டரீதியான கவலை அல்ல, மாறாக ஒரு தேசிய அவசரநிலை ஆகிவிட்டது. தேசிய தலைநகரில் நெரிசலைக் குறைக்கும் முயற்சிகள் அவசியமாகிறது. தலைநகர் டெல்லியில் மாசுபாடு வேறு எங்கும் காணப்படவில்லை. டெல்லி ஒரு விஷவாயு அறையாக மாறிவிட்டது. குடிமக்கள் உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறும்போது நாடாளுமன்றம் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது.

2025 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு தரநிலைகளுக்கு பொருந்தக்கூடிய ஒரு நாளையும் டெல்லி கண்டதில்லை. மாசுபாட்டால் டெல்லியில் மக்கள் 8 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுள்காலத்தை இழந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 17000 மக்கள் டெல்லியில் உயிர் இழக்கிறார்கள்.. இந்த ஏழு நபர்களில் ஒருவர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் உயிர் இழக்கிறார். இந்தியாவில் காற்று மாசால் 15 லட்சம் பேர் ஆண்டுக்கு உயிரிழக்கிறார்கள். காற்று மாசால் டெல்லி மக்களின் சராசரி வாழ்நாள் 8 ஆண்டுகள் குறைந்துள்ளது.
2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் மூச்சு திணறல் பிரச்சனையால் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அண்டை மாநிலமான ஹரியாணா மற்றும் பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரிப்பதுதான் டெல்லியின் மாசுபாட்டிற்கு ஒரே காரணம் அல்ல. வாகன உமிழ்வுதான் மிகப்பெரிய காரணமாகும். அனைத்து முக்கியமான விஷயங்களையும் டெல்லியை நோக்கியே மையப்படுத்துவது ஏன்? அனைத்து முக்கிய வேலைகளையும் ஏன் டெல்லியில் இருந்தே மேற்கொள்ள வேண்டும்.. ஏன் இந்த 2025ல் கூட 1950 போல் இந்திய அரசு டெல்லியில் இருந்து செயல்பட வேண்டும்? அதிகப்படியான புகைமூட்டம் உள்ள மாதங்களில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தேவையா என்பதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
குளிர்காலக் கூட்டத்தொடர்களைத் தவிர்த்து, மற்ற அமர்வுகளில் பணிபுரிவதன் மூலம் எத்தனை நாள்கள் இருக்க வேண்டும் என்பதற்கான அரசமைப்புத் தேவையை அடைய முடியும். முக்கியமான அரசு அலுவலகங்கள், கட்டங்கள் அனைத்தும் டெல்லியில் தான் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நிறுவ வேண்டும். அதன் மூலம் டெல்லி உச்ச நீதிமன்றத்தின் சுமை குறையும்.
அதேபோன்று தீர்ப்பாயங்களின் முதன்மை அமர்வுகளையும் நாட்டின் மற்ற பகுதிக்கு மாற்றுங்கள். அதேபோன்று மத்திய அமைச்சகத்தையும், அதன் துணை அமைப்புகளையும் மற்ற மாநிலங்களுக்கு மாற்றுங்கள்.. அரசு இயந்திரத்தை நாடு முழுவதும் விரிவடைய செய்யுங்கள். இதன் மூலம் டெல்லியில் நிலவும் இறுக்கத்தை குறைப்போம். இதன் மூலம் சுகாதாரமான காற்றை டெல்லி மக்கள் சுவாசிக்க வழி வகுப்போம்.
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருக்கிறது. குறிப்பாக, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.3,112 கோடி, நெல் கொள்முதல் மற்றும் மானியங்களுக்கான நிலுவைத் தொகை சுமார் ரூ.2,670 கோடி, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தினால், 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.3,548 கோடி எனத் தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" இவ்வாறு வில்சன் எம்.பி. பேசினார்.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம்












Click it and Unblock the Notifications