டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எவ்வளவு முயன்றும் முடியவில்லை.. அயோத்தி வழக்கில் தோல்வி அடைந்த சமரசம்.. என்ன காரணம்?

அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய நிறைய காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு சமரச முயற்சி தோல்வி- வீடியோ

    டெல்லி: அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய நிறைய காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அயோத்தி வழக்கில் அமைக்கப்பட்டு இருந்த மூவர் குழுவின் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது.

    ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். ஆனால் இந்த சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து அயோத்தி வழக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து மீண்டும் தினமும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நிறைய காரணம்

    நிறைய காரணம்

    இந்த நிலையில் இந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய நிறைய காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த சமரச பேச்சுவார்த்தையை மூவர் குழு மிகவும் கஷ்டப்பட்டு தீவிரமாக நடத்தியதாகவும். பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    முடியவில்லை

    முடியவில்லை

    ஆனாலும் பேச்சுவார்த்தையில் சில அமைப்புகள் சரியான உடன்படிக்கைக்கு வரவில்லை. சில அமைப்புகள் பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன் படிக்கையையும் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தையை மூவர் குழுவால் மேற்கொண்டு நகர்த்தி செல்ல முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

    என்ன ரகசியம்

    என்ன ரகசியம்

    ஆனாலும் அந்த அமைப்பு எது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. பாதுகாப்பு கருதி இதில் அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய போதே அதுகுறித்த தகவல்கள் எதையும் வெளியிட கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் இந்த கடைசி சமரச பேச்சுவார்த்தை ரிப்போர்ட் குறித்த தகவல்களும் சீல் செய்யப்பட்டே வழங்கப்பட்டுள்ளது.

    சில அமைப்புகள்

    சில அமைப்புகள்

    இந்த சமரச திட்டத்திற்கு சில அமைப்புகள் மட்டுமே ஆதரவு தெரிவித்தது. இந்து அமைப்பான நிர்மோஹி அகாரா, உத்தர பிரதேச அரசு மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் ராம் லல்லா உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்த குழுவிற்கு தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சமரச பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

    English summary
    Why the Ayodhya Mediation panel has failed to get a conclusive result at the end?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X