"ஆபத்து.. யாரும் சாப்பிடாதீங்க.." கோபி மஞ்சூரியனுக்கு மொத்தமாக தடை விதித்த மாநிலம்.. பகீர் காரணம்!
டெல்லி: இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு உணவுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலமே தடை விதித்துள்ளது. அதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் பல வகையான உணவுகள் இருக்கிறது.. இங்கே மாநிலத்திற்கு மாநிலம் கூட உணவுகள் முழுமையாக மாறும்.. ஆனால், சில வகை உணவுகள் நாடு முழுக்க அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கும்.

அப்படி நாடு முழுக்க மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று என்றால் அது கோபி மஞ்சூரியன்.. ஆனால், இந்த உணவுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலம் தடை விதித்துள்ளது. அதற்கான காரணத்தையும் அது என்ன மாநிலம் என்பதையும் பார்க்கலாம்.
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் என்றால் சைவம் சாப்பிடுவோருக்குக் கோபி மஞ்சூரியன்.. காலிஃபிளவரை வைத்துச் செய்யப்படும் இந்த உணவுக்கு எப்போதும் உணவு பிரியர்களுக்கு தனி இடம் இருக்கவே செய்கிறது. ஆனாலும், இந்த கோபி மஞ்சூரியனில் செயற்கை நிறங்கள் கலக்கப்படுவது பலருக்கும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. மேலும், சாலையோர கடைகளில் தயாரிக்கப்பட்டும் கோபி மஞ்சூரியன் சுகாதாரம் சார்ந்த பல கேள்விகளையும் எழுப்புகிறது.
இதன் காரணமாக யூனியன் பிரதேசமான கோவா இப்போது கோபி மஞ்சூரியன் உணவுக்கே மொத்தமாகத் தடை விதித்துள்ளது. அதேநேரம் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கும் முதல் மாநிலம் ஒன்றும் கோவா இல்லை. ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டில், ஸ்ரீ தாமோதர் கோவிலில் நடந்த வாஸ்கோ சப்தா கண்காட்சியின் போது, கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டன. ரெய்டு நடத்தப்பட்டுக் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டன.
கோபி மஞ்சூரியன் சுகாதாரம் தொடர்பாகப் பல ஆண்டுகளாகவே சர்ச்சை நிலவி வருகிறது. அது உடல் நலனுக்கு கடும் தீங்கை விளைவிப்பதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த மோதல் ஒரு பக்கம் தொடரும் சூழலில் தான் இப்போது கோவை கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்து உள்ளது.
கோபி மஞ்சூரியனின் தோற்றம் என்பது முன்பே சொன்னது போல சிக்கன் மஞ்சூரியனில் இருந்து வந்தது தான்.. மும்பையில் சீன உணவுகளைச் சமைப்பதில் புகழ்பெற்ற நபராக இருந்த நெல்சன் வாங் என்பவர் தான் முதலில் சிக்கன் மஞ்சூரியன் உணவைத் தயார் செய்தார். 1970களில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் பரிமாறப்பட்ட உணவுகளில் தான் முதலில் சிக்கன் மஞ்சூரியன் இடம்பெற்றது.
அந்த சமயத்தில் புதுமையான உணவை உருவாக்க நெல்சன் வாங் முயன்றால். அப்போது காரமான கார்ன்ஃப்ளார் மாவில் சிக்கன் நகெட்களை மிக்ஸ் செய்து வறுத்து... அதை சோயா சாஸ், வினிகர், சர்க்கரை மற்றும் தக்காளி சாஸுடன் செய்யப்பட்ட கிரேவியுடன் பரிமாறினார். அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் இருந்த நிலையில், சைவ பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த கோபி மஞ்சூரியன்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications