டெல்லியிலேயே முகாமிட்ட ஜி.கே.வாசன்.. பெருசா எதுவும் தகவல் உண்டா?
டெல்லி: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் கடந்த சில தினங்களாக முகாமிட்டுள்ளது ஏன் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
காங்கிரசில் மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி, மாநில தலைவர் என பல பதவிகளை வகித்தவர் ஜி.கே.வாசன். ஆனால் கட்சியில் மனக்கசப்பு ஏற்பட்டதால் தனது தந்தை மூப்பனார், வழியில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவங்கினார் வாசன்.

கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியிலும், இந்த லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணியிலும், தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், 3 தினங்களுக்கு முன், அரவக்குறிச்சியில் பிரசாரத்தை முடித்து, டெல்லிக்கு சென்ற வாசன், அங்கேயே இதுவரை முகாமிட்டுள்ளார். பாஜக தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால், தமாகா பொதுச்செயலர், முனவர் பாட்ஷா அந்த தகவலை இன்று மறுத்துள்ளார். பதவியை தேடி செல்பவர் வாசன் அல்ல என்றும், பாஜகவுடன் இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம், தமாகா கட்சிக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
டெல்லியிலுள்ள தன் நண்பர்களை வாசன் அடிக்கடி சந்திப்பது வழக்கம் என்பதால், இப்போதும், அவர் டெல்லி சென்றுள்ளார் என்றும், வதந்திகளில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications