டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏன் வேலை பார்க்குறீங்க?.. வீட்டுக்கு போங்க.. பஞ்சாப் தலைமை செயலாளரை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பஞ்சாப் தலைமை செயலாளர் வேலையை விட்டுவிட்டு போக வேண்டியதுதானே என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பஞ்சாப் தலைமை செயலாளர் வேலையை விட்டுவிட்டு போக வேண்டியதுதானே என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டெல்லியில் மாசு அதிகம் ஆகி வருவதை அடுத்து இதற்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதில் பஞ்சாப் , ஹரியானா, உத்தர பிரதேச மாநில தலைமை செயலாளர்கள் இன்று ஆஜர் ஆனார்கள்.

நீதிபதிகள் ஜேஜே அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் மிக கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள்.

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்கள். அதில், டெல்லியில் எத்தனை பேர் நாளுக்கு நாள் வாழ்க்கை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா. பல கோடி மக்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சனை இது. அவர்களுக்கு ஆஸ்துமா தொடங்கி கேன்சர் வரை இதனால் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

பஞ்சாப் எப்படி

பஞ்சாப் எப்படி

ஆனால் இப்போதும் கூட பஞ்சாப்பில் விவசாயிகள் களைகளை எரித்து வருகிறார்கள். இதை எப்படி அனுமதிக்கிறார்கள். விவசாயிகளுக்கு இதுகுறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டதாக இல்லையா. நாம் இவ்வளவு முன்னேறி என்ன பயன். விவசாயிகள் களைகளை எரிப்பதை கூட நம்மால் தடுக்க முடியவில்லை.

முடியவில்லை

முடியவில்லை

விவசாயிகளை தண்டிக்க முடியவில்லை என்றால் பஞ்சாப் தலைமை செயலாளரைதான் தண்டிக்க வேண்டும். பஞ்சாப் தலைமை செயலாளரைதான் டெல்லி மாசு பாட்டிற்கு பொறுப்பாக வேண்டும். ஏன் எப்போதும் ஏழை விவசாயிகள்தான் தண்டிக்கப்பட வேண்டுமா? மேலே இருப்பவர்களை யார் தண்டிப்பது.

வேலை ஏன்?

வேலை ஏன்?

மக்களை காக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஏன் பஞ்சாப் தலைமை செயலாளராக இருக்க வேண்டும் ? வேலையை விட்டுவிட்டு போக வேண்டியதுதானே. மொத்த நாட்டையும் மத்திய அரசே ஆளட்டும். நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்றால் உங்களுக்கு எதற்கு இந்த வேலை?

மாடு இறந்தால்

மாடு இறந்தால்

இந்த நாட்டில் பசு மாடு இறந்தால் பிரச்சனை ஆகிறது. ஆனால் மக்கள் இறப்பது பிரச்சனை ஆவது கிடையாது. விவசாயிகளை தண்டிப்பதும் இங்கு தேர்வு கிடைக்காது. இதை எல்லாம் மாநில அரசு முன்பே தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை அரசு செய்யவில்லை, என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

English summary
Why you people are working, Go home Mr. Chief Secretary says Supreme Court to Punjab CS in Delhi Pollution hearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X