ஏஐ தொழில்நுட்பம் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியுமா.. "ஆம்.." ஆனால் புதைந்திருக்கும் பெரிய ரிஸ்க்
டெல்லி: ஏஐ தொழில்நுட்பம் இப்போது மின்னல் வேகத்தில் பாய்ந்து வரும் நிலையில், முதலீடு துறையில் அதன் பயன்பாடு எப்படி இருக்கும் என்பதும் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இந்த நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.. இந்த மாற்றத்தை சாட் ஜிபிடி ஏஐ தொழில்நுட்பம் தான் தொடங்கி வைத்துள்ளது.. அதன் பின்னர் ஏஐ தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ந்து வருகிறது.

ஏஐ தொழில்நுட்பம் நாம் கற்பனை கூடச் செய்து முடியாத அளவுக்குப் பல வேலைகளை இது நொடிகளில் செய்து அசத்தி வருகிறது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பல்வேறு தளங்களில் மனிதர்களை விடச் சிறப்பாகச் செயல்படுமோ என்ற விவாதம் இதனால் எழுந்துள்ளது.
சாட் ஜிபிடி: ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி பல போட்டி தேர்வுகளில் கூட அசால்ட்டாக தேர்ச்சி பெறுகிறது.. இந்த காலத்தில் தான் ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு என்பது குறிப்பாகக் கடந்த சில மாதங்களில், அதிகம் பேசப்படும் தொழில்நுட்பங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், இந்த ஏஐ கருவியை வைத்து நம்மால் பணம் சம்பாதிக்க முடியுமா என்பதை இங்குப் பலருக்கும் எழும் கேள்வியாக உள்ளது.
AI என்பது கணினியால் கட்டுப்படுத்தப்படும் திறன் ஆகும். இது ஏற்கனவே பங்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. முதலீடு துறையில் ஏஐ அமைப்புகளின் பயன்பாடு ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.. பரந்த அளவிலான டேட்டாவை நிகழ் நேரத்தில் பகுப்பாய்வு செய்யும் திறனுக்காக ஏஐ இதில் பயன்படுத்தப்படுகிறது.
முதலீடு: அதேநேரம் முதலீடு என்பது பணம் தொடர்பானது என்பதால் இதை 100% நம்பவும் கூடாது. மாறாக இந்த ஏஐ தரும் டேட்டாக்களை நம் முடிவுகளை எடுக்க ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏஐ உருவாக்கிய போர்ட்ஃபோலியோக்கள் முதலீட்டு உத்திகள் ஏற்கனவே பரிசோதனையில் தான் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் போர்ட்ஃபோலியோக்கள் கணிசமான அளவுக்குப் பயன் தரவே செய்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் என்பது பல கோடி டேட்டாக்களை பிராசஸ் செய்யும் திறன் மூலம் சந்தை குறித்து முக்கிய கணிப்புகளை உங்களுக்குத் தரும். வல்லுநர்களாலும் இதுபோன்ற கணிப்புகளைத் தர முடியும் என்றாலும், அவர்களைக் காட்டிலும் இது வேகமான துல்லியமான முடிவுகளைத் தருகிறது. மேலும், மனிதர்கள் என்றால் சில விஷயங்களை அவர்கள் சென்டிமென்டிற்காக பார்ப்பார்கள். அல்லது ஒரு சில விஷயங்களை முன்முடிவுடன் அணுகுவார்கள்.
நன்மை எது: ஆனால், ஏஐ துறையில் இவை எதுவும் இருக்காது. அதற்கு இதெல்லாம் கவலை இல்லை. டேட்டா என்ன சொல்கிறதோ.. அதை வைத்தே அது நடவடிக்கை எடுக்கும். அது சின்ன கம்பெனியாக இருந்தாலும் சரி பெரிய கம்பெனியாக இருந்தாலும் சரி டேட்டா என்ன சொல்கிறதோ.. அதைத்தான் முன்முடிவு இல்லாமல் எடுக்கும். இது ஏஐ தொழில்நுட்பத்தில் இருக்கும் மிகப் பெரிய பிளஸ்.
எச்சரிக்கை தேவே: அதேநேரம் ஏஐ என்பது ஒரு கருவிதான் என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது ஏஐ சொல்கிறது என்பதற்காகவே கண்ணை மூடிக்கொண்டு அதை அப்படியே கேட்டுவிடக் கூடாது. அது சொல்லும் விஷயங்களை நாம் சரி பார்த்த பின்னரே முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.
இது பொதுவான செய்தி தானே தவிர முதலீட்டிற்கான எந்தவொரு ஆலோசனையோ அல்லது அறிவுரையோ இல்லை.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
டிஆர்பி ராஜா எச்சரிக்கை: கிளாட் ஃபேபிள் 5 பிரச்சனை.. தமிழ்நாடு முன்கூட்டியே தயாரானது! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
Claude Fable 5: வங்கிகளை மொத்தமாக முடக்கும் திறன் கொண்ட AI..? அமெரிக்க அரசு உத்தரவால் ஆந்த்ரோபிக் ஷாக்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
இனி உலகை ஆளப்போவது 'மாங்கா' நிறுவனங்கள் தான்.. மிக முக்கியமான மாற்றம்! -
62 வயது.. ஸ்கிராச்சில் இருந்து துவங்கும் ஜெப் பெசோஸ்.. அதென்னப்பா Prometheus! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications