டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துரைமுருகன் மகனை நோக்கிப் பாய்கிறதா தகுதி நீக்கம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    தொடரும் ரெய்டுகள்... நீதிமன்றத்தை நாடும் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த்- வீடியோ

    டெல்லி: கோடிக்கணக்கில் மூட்டை மூட்டையாக வேலூரில் பணம் சிக்கிய விவகாரத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் தொகுதியின் தேர்தல் ஒத்திவைக்கப்படும் அல்லது கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 17 நாட்களே உள்ளன. இந்த நிலையில் கடந்த 29. 30 ஆகிய தேதிகளிலும் இன்றும் (ஏப்ரல் 01) திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, அவரது மகனும் வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தின் கல்லூரி ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் ரெயிட் நடத்தி வருகிறார்கள் 29 -ம் தேதி துரைமுருகனின் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் நடந்த ரெய்டில் சுமார் 10 லட்சம் ரூபாய் சிக்கியதாக கூறப்பட்டது.

    Will Kathir Anandh be disqualified by EC?

    இதனையடுத்து இன்று மீண்டும் வேலூர் மாவட்டத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் அதில் கட்டு கட்டாக பணம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகுப்பம் என்ற இடத்தில் உள்ள ஒரு சிமென்ட் குடோனில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    முதலில் நடந்த ரெயிட் கூட வேலூரில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே நடந்துள்ளது. இந்த ரெயிடை அடுத்து துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்தே துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமென்ட் குடோனை இன்று வருமான வரித்துறையினர் தங்கள் ரெயிட் வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் கைப்பற்றப் பட்ட பணக்கட்டுகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வார்டுகளின் பெயர்கள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.

    Duraimurugan: தளபதி மூட்டை.. கிங்ஸ்டன் கல்லூரி ஃபைல்.. கோடிகளில் சிக்கிய பணம்.. அதிர்ச்சி பின்னணி! Duraimurugan: தளபதி மூட்டை.. கிங்ஸ்டன் கல்லூரி ஃபைல்.. கோடிகளில் சிக்கிய பணம்.. அதிர்ச்சி பின்னணி!

    இது குறித்த வீடியோக்களும் கசிய விடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் வெளியானது குறித்து இன்று சோளிங்கரில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின் சென்னையில் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சபேசன் என்பவர் வீட்டில் நடந்த ரெயிடில் 13 கோடி சிக்கியதே அது குறித்த வீடியோவை வருமான வரித்துறை வெளியிடுமா என்று கேள்வி எழுப்பினார் அதோடு புகார் வந்ததால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறும் வருமான வரித்துறை எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அமைச்சர்களின் வீட்டில் பணம் இருக்கிறது என்று கூறினால் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

    இப்போது இந்த ரெயிட் தொடர்பாக நீதிமன்றத்தை திமுக அணுகியுள்ளது. திமுக வழக்கறிஞர் வில்சனின் புகாருக்கு பதிலளித்த நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்யுங்கள் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது. திமுக தரப்பும் மனுவாக தாக்கல் செய்துள்ளது. நாளை விசாரணை நடைபெறவுள்ளது.

    இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

    இந்த நிலையில் கைப்பற்றப் பட்ட பணம் வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தைக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த பணக்கட்டுகளில் திமுகவினர் பெயர்களும் டெலிவரி செய்யவேண்டிய பெயர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இது வாக்களர்களுக்கு கொடுக்கப்படுவதர்காகவே வைத்திருந்த பணம் என்றும் இதனை வைத்தே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு முன்னர் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் ஆர்.கே நகர் தேர்தல்களில் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்டதால்தான் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த முன்னுதாரணங்கள் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் அல்லது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தல் நடைபெறலாம் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Sources say that EC may decide to disqualify Kathir Anandh from contesting in Vellore after the seizure of cash.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X