ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்.. கேன்சல் ஆனால் கட்டணம் ரத்து செய்யப்படுமா? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதம் நடந்து வருகிறது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் இக்ரா சவுத்ரி, 'ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளை இடம் இல்லாத காரணத்தால் ரயில்வே நிர்வாகமே ரத்து செய்யும்போது, காத்திருப்போர் பட்டியல் ரயில் டிக்கெட் ரத்துக்கு கட்டணம் விதிப்பது ஏன் என்றும், ரத்து செய்யப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
ரயிலில் எல்லாருக்குமே இடம் கிடைப்பது இல்லை.. ஆனால் ரயிலில் முன்பதிவு செய்வோர், ரத்து செய்தால், அதனை அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு தரும் வகையில் காத்திருப்பு பட்டியலும் தயாரிக்கப்படுகிறது. இவர்களுக்கு டிக்கெட்டை யாராவது ரத்து செய்யும் டிக்கெட் கிடைத்துவிடும். ஒவ்வொரு ரயிலும், பழைய வரலாறுகளின் அடிப்படையில் டிக்கெட் முன்பதிவுடன் , காத்திருப்போர் பட்டியலுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பாண்டிய எக்ஸ்பிரஸ் , பொதிகை உள்பட பல்வேறு ரயில்களில் சுமார் 200 பேர் வரை கூட காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு ரயிலுக்கும் தட்கல் வெயிட்டிங், ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் என இரண்டு காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு சிலமணி நேரம் முன்பு வரை காத்திருப்போர் பட்டியல் என்பது குறைந்து கொண்டே வரும். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட் ரத்து செய்தால், காத்திருப்போருக்கு டிக்கெட் கிடைக்கும் இல்லாவிட்டால் பட்டியலில் 50ல் இடம் பிடித்தவர்கள் 10க்கு வருவார். கடைசியில் சார்ட் தயாரிக்கும் போது, அவர்களுக்கு இடம் கிடைத்துவிடும்.
பெரும்பாலும் குறைவான காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ரயிலில் இடம் கிடைத்துவிடும். ரயில் டிக்கெட் கிடைக்காமல் உள்ளவர்களுக்கு டிக்கெட் தானாக ரத்தாகிவிடும். காத்திருப்பு பட்டியலுக்கான கட்டணம் போக மீதி கட்டணத்தை ரயில்வே நிர்வாகம், அவர்கள் செலுத்திய பேமெண்ட் மோடிலேயே திருப்பி அனுப்பிவிடும். காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு இடம் இல்லாத காரணத்தால் ரயில்வே நிர்வாகமே ரத்து செய்யும்போது, அதற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர் காலக்கூட்டத்தொடரின் 12ஆவது நாளான நேற்று வழக்கம் போல் இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் இக்ரா சவுத்ரி, "ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளை இடம் இல்லாத காரணத்தால் ரயில்வே நிர்வாகமே ரத்து செய்யும்போதும், டிக்கெட் ரத்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அந்த கட்டணத்தை ரத்து செய்யும் திட்டம் உள்ளதா?" என்று கேட்டார்.
அதற்கு ரயில்வே அமைச்சசர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், கன்பார்ம் செய்யப்பட்ட மற்றும் ஆர்.ஏ.சி. ரயில் டிக்கெட்டுகளை எடுத்தவர்கள் அவற்றை ரத்து செய்தால், அந்த இடங்களை அளிப்பதற்காகவே காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் தரப்படுகின்றன.
காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளுக்கு உயர்வகுப்பு பெட்டிகளில் தரம் உயர்த்துவதற்கும், 'விகால்ப்' திட்டத்தின்கீழ், வேறு ரயில்களில் இடம் ஒதுக்கப்படுவதற்கும் வாய்ப்பு தரப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்படும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளுக்கு கிளார்க் கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. ரத்து உள்பட அனைத்து வகையிலும் பெறப்படும் வருவாய், ரயில்கள் இயக்கம் மற்றும் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது" என்று அமைச்சர் கூறினார்.
மேலும் ரயில்வே சேவைக்காக நவீன செல்போன் செயலி அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் உண்டா? என எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்கும்போது, "பயணிகள் சேவையை அடிப்படையாக கொண்ட ஆப் ஒன்றை இந்திய ரெயில்வே உருவாக்கி வருகிறது. இதன் மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறுதல், புகார் தெரிவித்தல், ரெயில் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஒரே ஆப்பில் பெற முடியும்" என்று கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications