ஹோட்டலுக்கு சாப்பிட போறீங்களா? அப்போ இதை படிங்க.. ரொம்ப நாளுக்கு பின் வந்த நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடிக்கடி ஹோட்டலில் சென்று சாப்பிடும் வழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்குத்தான் இந்த செய்தி. மத்திய அரசின் நடவடிக்கை ஒன்று ஹோட்டலில் உணவு உண்பவர்களுக்கு சாதகமாக மாறி உள்ளது.

கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.1,118.50-க்கு விற்பனை ஆனது.

Will the food prices in restaurants go down as the price of gas cylinder slashed?

இந்த நிலையில்தான் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள் வர உள்ளதால் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இந்த நிலையில்தான் நேற்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 157.50 குறைக்கப்பட்டது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹோட்டல் உணவு: இதனால் ஹோட்டல் உணவு பொருட்களின் விலை குறையும் வாய்ப்புகள் உள்ளன. அதன்படி தக்காளி விலை தற்போது வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த மாதம் 150 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது மீண்டும் 60 ரூபாயை எட்டி உள்ளது.

கடந்த மாதம் முழுக்க தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. இதனால் உணவுப்பொருட்களின் விலை தற்காலிகமாக உயர்ந்தது. பல இடங்களில் தக்காளி பயன்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் விலை இரடிப்பும் ஆனது. இந்த நிலையில்தான் தற்போது தக்காளி விலை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

கூடுதல் மகிழ்ச்சியாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை 5-7 ரூபாய் வரை குறையும் வாய்ப்புகள் உள்ளன.

பெட்ரோல் விலை: கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.

நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும்.

மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.

அதன்பின் ஒன்றரை வருடமாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+