இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா.. இவர்களுக்கு இனி காப்பீடு கிடைக்காது.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: காப்பீடு எடுப்போருக்கு காப்பீடு கிடைக்க வேண்டும் என்றால் எல்லாம் முறையாக இருக்க வேண்டும். அதில் நம்முடைய தவறுகள் இருக்கக்கூடாது.. இல்லாவிட்டால் காப்பீடு என்பது கிடைக்காமலேயே போகும். ஏனெனில் காப்பீடு நிறுவனங்கள் பணத்தை இழப்பீடாக தருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையிலும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது காப்பீடு நிறுவனங்களின் பொறுப்பு இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காப்பீடு விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் நடைமுறையில் இருக்கிறது. காப்பீடு எடுத்த உடன் காப்பீடு இனி கிடைத்துவிடாது.காப்பீடு வேண்டும் என்றால் நமதுபக்கம் எந்த தவறும் இருக்கக்கூடாது.உதாரணமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கியிருக்கக்கூடாது. அதேபோல் ராங் சைடில் போய் விபத்தில் சிக்கியிருக்ககூடாது. அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கியிருக்கக்கூடாது. அதேபோல் குடித்து குடித்து குடலை கெடுத்து, செத்து போயிருக்கக்கூடாது. இப்படி பல்வேறு சிக்கல்கள், நிபந்தனைகள் உள்ளன. விபத்தில் சிக்கி உயிரிழந்தாலும், அதில் உயிரிழந்தவர் மேல் தவறு இல்லை என்றால் மட்டுமே காப்பீடு இனி கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்ப்போம்.

கர்நாடகாவை சேர்ந்த ரவிஷா என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி வேகமாக காரை ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கியுள்ளார். தனது தந்தை, சகோதரி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்தில் ரவிஷா உயிரிழந்திருந்தார். அவரது மரணத்துக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி ரவிஷாவின் மனைவி, மகன் ஆகியோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ரவிஷா வேகமாகவும், போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், அலட்சியமாகவும் காரை ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக விசாரணையில் உறுதி செய்ததது. தொடர்ந்து ரவிஷாவின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது. ரவிஷா அதிவேகமாக காரை ஓட்டியதும், அலட்சியமாகவும் இருந்ததால்தான் அவரது மரணம் ஏற்பட்டு இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், எனவே இதற்கு இழப்பீடு கேட்க அவரது வாரிசுகளுக்கு உரிமை இல்லை என தீர்ப்பளித்தது. அதை மீறி இழப்பீடு கொடுத்தால் ஒரு மனிதரின் சொந்த தவறுகளுக்காக இழப்பீடு பெறுவதை போன்றாகும் என்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இதை எதிர்த்து ரவிஷாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் நரசிம்மா, மகாதேவன் அமர்வில் நேற்று விசாரித்தது. அப்போது, அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையிலும் வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது காப்பீடு நிறுவனங்களின் பொறுப்பு அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
பின்னர் இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications