21 நிமிடங்களில் மொத்தமும் காலி.. எங்கெங்கு, எத்தனை மணிக்கு, எப்படி தாக்குதல் நடந்தது? முழு விவரம்
Recommended Video

டெல்லி: இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தின என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் மொத்தம் 12 மிராஜ் போர் விமானங்கள், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடியாக நுழைந்தன.
முதல் தாக்குதல் பாலகோட் என்ற பகுதியில் அதிகாலை 3 மணி 45 நிமிடங்களுக்கு நடந்துள்ளது.

பாலகோட் தாக்குதல்
அங்குள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. நிம்மதியான தூக்கத்தில் இருந்த தீவிரவாதிகள் அப்படியே, நிரந்தரமான தூக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மிகப்பெரிய சேதம் விளைவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மூன்றே நிமிடங்களில், அதாவது அதிகாலை 3 மணி 48 நிமிடங்களுக்கு முசாபர்பாத் என்ற பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அடுத்ததாக குண்டுகளை அள்ளி வீசியது இந்திய விமானப்படை விமானங்கள்.

10 நிமிடங்களில் 3வது தாக்குதல்
அடுத்த பத்தாவது நிமிடம், சக்கோதி என்ற பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை அள்ளித் தெளித்தது. இந்த தாக்குதல் நடைபெறும் போது மணி அதிகாலை 3மணி 58 நிமிடங்கள்.

21 நிமிடங்கள்
மொத்தம் 21 நிமிடங்களில் மூன்று முகாம்களையும் வெற்றிகரமாக தகர்த்து அழித்து விட்டு, இந்திய விமானப்படை விமானங்கள் மீண்டும் தாயகம் திரும்பின. மிக அதி விரைவாகவும், துல்லியமாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிகளின் முகங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

லேசர் உதவியுடன் தாக்குதல்
மிக குறைந்த உயரத்தில் பறந்து சென்று தாக்குதல் நடந்துள்ளது. லேசர் உதவியுடன் சரியாக இலக்குகளை குறிவைத்து குண்டு வீசப்பட்டுள்ளன. எதிரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக பகல் நேரத்தை தவிர்த்துவிட்டு அதிகாலையில் அதிரடி அட்டாக் நடத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications