அம்மாவுக்கு சீரியஸ்.. ஆக்ஸிஜன் கொடுங்க.. மண்டியிட்டு கெஞ்சிய பெண்.. வைரலாகும் போட்டோ!
டெல்லி: தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டரை தருமாறு பெண் ஒருவர் மண்டியிட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்கடித்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் தலைநகர் டெல்லி திண்டாடி வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் ஆக்ஸிஜன் நிரப்பும் இடங்களுக்கே சென்று வரிசையில் காத்திருந்து ஆக்ஸிஜன் வாங்கி வரும் நிலைக்கு நோயாளிகளின் உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அது போல் டெல்லியை சேர்ந்தவர் ஸ்ருதி சஹா. இவரது தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக டெல்லியின் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதிகளில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் மையத்திற்கு வெளியே காத்திருந்தார்.

கெஞ்சிய ஸ்ருதி
அப்போது அங்கிருந்த காவலர்களிடம் ஸ்ருதி கெஞ்சுகிறார். ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். ஆக்ஸிஜன் கிடைத்தால்தான் எனது தாயின் உயிரை காப்பாற்ற முடியும் என கெஞ்சி கதறி அழுகிறார். ஒருகட்டத்தில் மண்டியிட்டு ஆக்ஸிஜன் கொடுங்கள் கேட்கும் காட்சிகளும் நடந்தன.

அதிகாலை 2 மணி
இந்த நிலையில் அவருக்கு ஒரு போன் வந்தது. அதில் ஸ்ருதியின் அம்மா மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்ட ஸ்ருதி அப்படியே மனம் உடைந்து போய் அழுதார். அவரை சுற்றியிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர். அப்போது ஸ்ருதி "அதிகாலை 2 மணியிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை தேடி வந்தோம்.

அம்மா உடல்நிலை
இந்த இடத்தில் கிடைக்கும் என்றார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என அவர்களிடம் நான் சொல்லி அழுது கொண்டிருந்தேன். ஆனால் ஆலையை உடனடியாக திறக்கவில்லை. இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என கதறினார்.

ஆக்ஸிஜன்
பின்னர் அவரை ஒரு இளைஞர் கையை பிடித்து தூக்கி வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நடைபெறுகின்றன. தங்களது அன்புக்குரியவர்களின் உயிரை காக்க ஆக்ஸிஜனுக்காகவும் மருத்துவமனை படுக்கைக்காகவும் பலர் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications