உல்லாசமாக 16 வருஷம் வாழ்ந்துட்டு.. இப்ப சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடிய பெண்! ஏன் தெரியுமா? நீதிபதி நறுக்
டெல்லி: 16 வருடங்கள் தனக்கு பிடித்த நபருடன் ஒரே வீட்டில், லிவ் இன் உறவுமுறைப்படி வாழ்ந்து வந்துள்ளார் ஒரு பேராசிரியை.. ஆனால், தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தந்த பரபரப்பு தீர்ப்பு பாருங்க.. என்ன நடந்தது?
சமீபகாலமாகவே லிவ் - இன்- உறவுகள் என்பது சகஜமாகி கொண்டிருக்கிறது.. தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்று கடந்த 2018ல் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அத்துடன் லின்இன் உறவில் வாழும் தம்பதிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது..

குடும்ப சூழல்கள்
பல சூழல்களில் ஒரு தனிநபரின் குடும்ப அமைப்பில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் அது குடும்பமாக அங்கீகரிப்பட மறுக்கப்படுகிறது என்றாலும், குடும்ப உறவு என்பது திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் இணையர்கள், தன்பாலின உறவாளர்கள் நடத்தும் குடும்பத்தையும் உள்ளடக்கியதே என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டும் இதுகுறித்து தெளிவுபடுத்தியிருக்கிறது.
எனவே, திருமணம் செய்யாமல், தம்பதி இருவரும் ஒன்றாக வாழும்போது அவர்களுக்குள் அனைத்து வகையான உறவுகளும் நடைபெறுகிறது. அதேசமயம், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு முற்றி, தகராறு வெடித்துவிட்டால் ஆண் நண்பர்கள் மீது பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து விடுகின்றன. அந்தவகையில், லிவ்-இன் தம்பதி 2 பேரும், சண்டை போட்டுக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடியிருக்கிறார்கள்.
பேராசிரியை உறவு
அவர் ஒரு கல்லூரி பேராசிரியை.. தனக்கு பிடித்த பேங்க் மேனேஜர் ஒருவருடன், 16 வருடங்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார்.. ஆனால், இப்போது திருமண ஆசை காட்டி, பாலியல் உறவு வைத்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று, அந்த பேராசிரியை போலீஸில் புகார் செய்துள்ளார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வங்கி மேலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு
அப்போது நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சொல்லும்போது, ''தம்பதி 2 பேரும் நன்றாக படித்தவர்கள். ஒருவரையொருவர் விரும்பித்தான் உறவு வைத்திருக்கிறார்கள்.. இருவரும் வேறு வேறு நகரங்களில் பணியாற்றியபோதும், ஒருவர் இடத்திற்கு இன்னொருவர் வந்து சென்றிருக்கிறார்கள். அந்தவகையில் 16 வருடங்கள் லிவ் இன் உறவில் நன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த 16 ஆண்டுகளாகவே புகார்தாரர் மேல் முறையீட்டாளரின் கோரிக்கைக்கு இணங்கியும் இருக்கிறார்.
அப்படியிருக்கும்போது, 16 வருடங்கள் திருமண ஆசை காட்டி உறவு வைத்துக்கொண்டார் என்று பேராசிரியை சொல்வது நம்பும்படியாக இல்லை. நீண்ட கால உறவில் இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. அதேபோல, அவர்களுக்கு இடையிலான உறவில் எந்த கட்டாயமோ அல்லது நிர்ப்பந்தமோ இருப்பதாகவும் தெரியவில்லை.
நம்புற மாதிரி இல்லையே
திருமண வாக்குறுதியை மட்டுமே வைத்து கொண்டு, பாலியல் உறவுகள் தொடர்ந்ததாக கூறப்படும் இத்தகைய வாதங்களால், நீண்ட கால உறவு காரணமாக குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையை இழக்கின்றன.
திருமண வாக்குறுதி தந்திருந்தாலும்கூட, அந்த கூற்றை நம்பும்படியாக இல்லை. லிவ் இன் உறவில் வாழ்ந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்துக்கொண்டதாக ஒரு பெண், பாலியல் புகார் சொல்லவும் முடியாது.
அதேபோல, தம்பதிகள் நீண்டகாலம் ஒன்றாக சேர்ந்து வாழும்போது, அந்த ஆணின் மீது, சம்பந்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை புகார் செய்யவும் முடியாது. எனவே, பாலியல் உறவுகளுக்கு பின்னால் திருமண வாக்குறுதி மட்டும் காரணமாக இருந்தது என்பதை தீர்மானிப்பது கடினம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications