ஏர்போர்ட்டில் திடீர் மாரடைப்பு.. உடனே பெண் டாக்டர் செய்த செயல்! 5 நிமிடத்தில் பிழைத்த முதியவர்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தின் ஃபுட் கோர்ட் பகுதியில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு விழுந்த முதியவரை எந்த உபகரணமும் இன்றி வெறும் 5 நிமிடத்தில் கண்விழிக்க வைத்த பெண் டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நோய் பாதிப்பு உள்ளவர்கள் பஸ், ரயில், விமான பயணங்களின்போது தங்களுக்கான மாத்திரை, மருந்துகளை கையில் எடுத்து செல்வதை நாம் பார்த்திருக்கக்கூடும். ஆனாலும் கூட சில நேரங்களில் பயணத்தின்போது சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது.

பஸ் பயணத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையை நோக்கி சென்று பாதிக்கப்பட்டவரை அனுமதிக்க முடியும். ஆனால் ரயில், விமான பயணங்களின்போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?. அதே ரயில், விமானத்தில் டாக்டர்கள் யாராவது இருந்தால் சரி.. இல்லாவிட்டால் உண்மையிலயே பாதிக்கப்பட்டவர் கடினமான சூழலை எதிர்கொள்வார்.
இப்படியான ஒரு சம்பவம் தான் இன்று டெல்லி விமான நிலையத்தில் நடந்துள்ளது. விமான நிலையத்தின் ஃபுட் கோர்ட் பகுதியில் 60 வயதுக்கு மேல் நிரம்பிய முதியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கியுள்ளார். இந்த வேளையில் அங்கு வந்த பெண் டாக்டர் ஒருவர் யோசிக்காமல் அவருக்கு சிபிஆர் உயிர்காக்கும் முறையை அளிக்க தொடங்கினார்.
அதன்படி மாரடைப்பால் மயங்கிய முதியவரின் மார்பு பகுதியில் இரண்டு கைகளை வைத்து அழுத்தம் கொடுத்தார். அதன்பிறகு அவரின் கையை பிடித்து பல்ஸ் பார்த்து சிறிது சிறிதாக இடைவெளி விட்டு மார்பு பகுதியில் அழுத்தம் கொடுத்தார். இப்படி 5 நிமிடம் அவர் செய்த நிலையில் அந்த முதியவர் கண்விழித்தார். அதன்பிறகு அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு சிபிஆர் உயிர் காக்கும் முறையை பயன்படுத்தி கண்விழிக்க வைத்த பெண் டாக்டரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்படும்போது அவருக்கு சிபிஆர் உயிர் காக்கும் முறை என்பது மிகவும் முக்கியமானதாகும். இதனால் தான் நாம் அனைவரும் சிபிஆர் எனும் (CPR அல்லது Cardiopulmonary resuscitation) உயிர் காக்கும் டெக்னிக்கை கற்று கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்த சிபிஆர் முறை என்பது மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசிக்க காற்றை வழங்கும் டெக்னிக்காகும். அதாவது ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்படும்போது அவரது மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுப்பது அல்லது வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்றை சுவாசிக்க வழங்குவது உள்ளிட்ட டெக்னிக்குகள் இந்த முறையில் அடங்கும்.
அந்த வகையில் டெல்லி விமான நிலையத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதியவரின் மார்பில் அழுத்தி பெண் டாக்டர் காப்பாற்றி உள்ளார். இந்நிலையில் தான் அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பெண் டாக்டர் காப்பாற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications