கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்!
டெல்லி: தேசியளவில் இப்போது மீண்டும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவாதமாக மாறியுள்ளது. அனைத்து கட்சிகளுமே இதை ஆதரிக்கும் சூழலில், இப்போது இது திடீரென விவாதமாக வெடிக்க என்ன காரணம்.. எதிர்க்கட்சிகள் இதில் பிரச்சனையாகச் சொல்லும் விஷயங்கள் என்ன! இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதை ஆதரித்தாலும் கூட பல்வேறு காரணங்களால் இதுவரை இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த 2023ல் மத்திய அரசு 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்) கொண்டு வந்தது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
இதுதான் இப்போது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சம்பந்தமே இல்லாமல் 3 ஆண்டுகள் கழித்து இது விவாதமாக இருக்க என்ன காரணம்.. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஆதரித்தாலும் இதில் உள்ள சில விஷயங்களைக் கடுமையாக எதிர்ப்பது ஏன் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஏன் இப்போது திடீர் விவாதம்?
2023லேயே சட்டம் வந்தாலும், "மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் இது அமலுக்கு வரும்" என்ற ஒரு செக் வைத்திருந்தது மத்திய அரசு. வழக்கமாக 2021ல் நடந்திருக்க வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போய், இப்போது தான் நடத்தப்படுகிறது. இது 2027ல் தான் முழுமையாக முடியும் எனத் தெரிகிறது.
இதனால் 2029 லோக்சபா தேர்தலிலும் மகளிர் இட ஒதுக்கீடு கிடைப்பது கஷ்டம் என்ற பேச்சு எழுந்தது. இதைப் போக்கவே, அரசு இப்போது ஒரு புதிய 'திருத்த மசோதாவை' கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம், அதாவது ஏப்ரல் 16ல் நாடாளுமன்றத்தில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.. மத்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் டெல்லி வட்டாரத்தில் இந்த பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த திருத்தத்தின்படி 2027 கணக்கெடுப்பு வரை காத்திருக்காமல், 2011 கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029 தேர்தலிலேயே 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப்படும்.
லோக்சபாவில் என்ன மாற்றம் வரும்?
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்றத்தின் எண்ணிக்கை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், அத்தோடு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மூலம் இப்போது 543ஆக இருக்கும் லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை 816ஆக உயர்த்தத் திட்டம் இருக்கிறது. இதில் 33% என்றால், சுமார் 273 இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்
எல்லாம் நல்ல விஷயம் தானே பிறகு ஏன் எதிர்ப்பு என்ற கேள்வி பலருக்கும் வரும். பல எதிர்க்கட்சிகள், குறிப்பாகத் தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறையே எதிர்க்கின்றன. அது தனிக்கதை. இது மட்டுமின்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவிலும் சில சிக்கல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போதே 2026ல் நாம் இருக்கும் சூழலில், 2011 கணக்கை வைத்து எப்படி தொகுதிகளைப் பிரிக்க முடியும்? என்பது முதல் கேள்வி..
அதை விட முக்கியமாக உள் இட ஒதுக்கீடு தேவை என்றும் வலியுறுத்துகிறார்கள். அதாவது 33% இட ஒதுக்கீட்டில் ஓபிசி பெண்களுக்கு ஏன் தனிப் பங்கு இல்லை? என்பது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நீண்டகாலக் கோரிக்கை. பட்டியலின பெண்களுக்கு உள்ளதைப் போலவே ஓபிசி பெண்களுக்கும் தனி ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். அதேபோல முஸ்லீம் பெண்களுக்கும் தனியாக இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுவே இப்போது விவாதமாக மாறியுள்ளது
-
மாறப்போகிறதா இந்திய நேரம்? உஜ்ஜயினி டூ கிரீன்விச்.. மத்திய அரசின் 'மஹாகால்' பிளான் -
அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக் -
ஒடிசாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. கரண் அதானி அறிவிப்பு -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம்












Click it and Unblock the Notifications