"மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வருது".. லோக்சபா தொகுதி 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்.. பிளான் ரெடி
டெல்லி: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) அமலுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதம் வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டங்களை 2029 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதன்பிறகு வரும் சட்டசபை தேர்தல்களில் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசு தனது திட்டத்தை மாற்றி உள்ளது.
அதாவது இந்த 2 திட்டங்களை விரைவிலேயே கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்காக நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
2 மசோதாக்களை கொண்டு வர திட்டம்
இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நாடாளுமன்ற சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கன இடஒதுக்கீட்டை 33 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக 2 முக்கிய மசோதாக்களை சட்ட திருத்தங்களுடன் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி தொகுதி மறுவரையறைக்கான ஒரு மசோதாவும், அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கான இன்னொரு மசோதவும் கொண்டு வரப்பட உள்ளது. அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு லோக்சபா, ராஜ்யசபாவில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்களிடம் மத்திய அரசு ஆதரவு கேட்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லோக்சபா தொகுதி 816 ஆக உயரும்
மேலும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரைறை காத்திருக்காமல் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை இடங்களை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்ட அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
தற்போதைய சூழலில், தொகுதி மறுவரையறை நடைமுறையில் இருந்து மகளிர் இடஒதுக்கீட்டை தனியாக பிரித்து முதற்கட்டமாக லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தற்போதைய லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்பது 816 ஆக உயரும்.இதனால் லோக்சபாவில் தனி மெஜாரிட்டிக்கு 409 எம்பிக்கள் தேவையாக இருக்கும்.
பெண்களுக்கு மட்டும் 273 தொகுதிகள்
இதில் 33 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கு 273 தொகுதிகள் ஒதுக்கப்படும். இந்த தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இந்த தொகுதிகள் தவிர்த்து பிற தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள் போட்டியிட முடியும்.
இதனால் லோக்சபா, சட்டசபைகளில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் ராஜ்யசபா மற்றும் ஒவ்வொரு மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.
3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை
இந்த 2 மசோதாக்களை நிறைவேற்ற லோக்சபா, ராஜ்யசபாவில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் ஆளும் பாஜக கூட்டணிக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. இருப்பினும் மத்திய அரசு நடப்பு தொடரிலேயே இந்த முயற்சியை எடுத்துள்ளது.
ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஆதரவு கிடைக்காவிட்டால் சிறிது நாட்களுக்கு பிறகு பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி விவாதிக்க குறுகிய கால நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications