Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகை வீட்டுதாரர்களுக்கு குஷி.. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 3 கோடி வீடு! பிஎம் ஆவாஸ் யோஜனா மாஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்.. குறிப்பாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அறிவிப்பு ஒன்றை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று, கடந்த ஜூன் மாதத்துவக்கத்தில் ஆட்சி அமைத்த மோடி அரசின் 3வது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் இதுவாகும். அந்தவகையில், இன்று 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்..

pradhan mantri awas yojana Budget 2024 union budget 2024 Nirmala Sitharaman

ஆய்வறிக்கை: எப்போதுமே ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2024-25ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் பெற்றது. இப்படிப்பட்ட சூழலில், கிராமப்புற மக்கள் பலன்பெறும் வகையில், அதிரடி அறிவிப்பினை நிதியமைச்சர் அறித்திருக்கிறார்.

அதன்படி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்த அறிவிப்பானது, கிராமப்புற மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

ஏழை மக்கள்: இதற்கு காரணம், கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுவற்காகவே துவங்கப்பட்டதுதான, மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டமாகும்... கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றி, அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதாக உத்தரவாதம் தந்து, அதன்படியே இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பகுதிகளாக இந்த திட்டத்தின்கீழ் பிரிக்கப்பட்ட நிலையில், வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.. குறிப்பாக எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருக்கு மானியம் பெருமளவு வழங்கப்படுகிறது.. அதேபோல, 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு உரியதாகும்.
இந்த திட்டத்தில் கடனை திருப்பி செலுத்தவும் 20 வருடம் அவகாசம் உள்ளதுடன், வட்டி விகிதமும் மிகவும் குறைவு...

சிறப்பு அம்சங்கள்: வருமானம் மற்றும் நபரின் வகை அடிப்படையில் அரசாங்கம் இந்த மானியத்தை ஒதுக்குகிறது.. இந்த திட்டத்தின்கீழ் கட்டித்தரப்படும் வீடுகளில் பாத்ரூம் வசதி, கரண்ட் வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் வசதிகள் உள்ளன..

வீடுகளை வேகமாக வீட்டை கட்டி முடிப்பதுடன், உரித்த நேரத்தில் ஒதுக்கீடுகளை தருவது, நேரடி ஆய்வுகள், தேவைப்படும் நேரத்தில் நிதியை விடுவிப்பது போன்றவையெல்லாம்தான், இப்படியொரு திட்டம், கிராமப்புற மக்களிடம் பெருமளவு வெற்றிபெற்றதற்கு காரணமாக இருந்து வருகிறது.

கிராமப்புற மக்கள்: இப்படிப்பட்ட சூழலில், இந்த திட்டத்தில் கூடுதல் பலனை பெறும்வகையில், 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.. அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாக, பிரதமர் வீடு கட்டும் திட்டம் திகழ்ந்து வரும்நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பானது, கிராமப்புற மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+