டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பிரதமர் மோடி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியதில் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சிலர் பொய் பரப்புவதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார்.

Word From PM Modis Speech In Rajya Sabha Expunged

இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி பேச்சில் பொய் என்ற வார்த்தை மட்டும் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பிரதமர் பேச்சுகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவது இல்லை. 2018-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரஷாத் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையானது. அதனால் சில வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

பிரதமர்னா வேற மாதிரி இருக்கனும்.. மோடி பிரதமரை மாதிரியே நடந்து கொள்வதில்லை.. ராகுல் காந்தி அட்டாக் பிரதமர்னா வேற மாதிரி இருக்கனும்.. மோடி பிரதமரை மாதிரியே நடந்து கொள்வதில்லை.. ராகுல் காந்தி அட்டாக்

அதற்கு முன்னர் 2013-ல் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியுடன் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவ்விவாதத்தில் மன்மோகன்சிங் பேசிய சில வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A word has been expunged from Prime Minister Narendra Modi's speech in parliament on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X