உத்தரகண்ட் வெள்ளம்: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆறுதல்!
டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இறந்தவர்களுக்கு உலக நாடுகள் ஆறுதல் தெரிவித்துளன.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் டுவிட்டரில் பதிவுட்டுள்ளன.
உத்தரகண்ட் வெள்ளத்தில் சுமார் 100 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

உத்தரகண்ட் வெள்ளம்
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் தபோவான் என்ற இடத்தின் அருகே நீர் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் திடீரென பனிப்பாறைகள் வெடித்துச் சிதறி, பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் உள்ள தௌலிகங்கா ஆற்றில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பிரதமர் மோடி
அச்சமயம் நீர் மின் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்த சுமார் 100 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். இதேபோல் திரையுலக, கிரிக்கெட் பிரபலங்களும் டுவிட்டரில் தங்களது ஆறுதல்களை பதிவிட்டு வருகின்றனர்.

உலக தலைவர்கள் ஆறுதல்
இந்த நிலையில் பல்வேறு வெளிநாடுகளும் இந்த துயர சம்பவத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு:-
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்:- இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடித்து வெள்ளம் சூழ்ந்து 110 பேர் மாயமாகி உள்ளனர். பிரான்ஸ் இந்தியாவுடனான முழு ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது, எங்கள் எண்ணங்கள் மாயமானவர்களுடனும், அவர்களது குடும்பங்களுடனும் உள்ளன.

அமெரிக்கா ஜப்பான்
அமெரிக்க வெளியுறவுத்துறை:- இந்தியாவில் பனிப்பாறை வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல். இறந்தவர்களின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நாங்கள் துக்கப்படுகிறோம், காயமடைந்தவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வேண்டும். இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் சடோஷி சுசுகி:- உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால் துன்பகரமான இழப்பு மற்றும் பல அப்பாவி உயிர்களைக் காணவில்லை என்பதற்காக என் இதயம் இரத்தம் கசியும். எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன், காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications