12 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு... வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் உலக நாடுகள் அச்சம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 4.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே உலக வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ளது.

Worldwide Corona update 4.43 lakh people tested positive for Corona In the Past 24 hours

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவில் 49,907 பேருக்கும் பிரான்சில் 29,759 பேருக்கும் இத்தாலி நாட்டில் 26,051 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 4,43,695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவிலான கொரோனா பாதிப்பு 12 கோடியைக் கடந்துள்ளது.

நேற்று மட்டும் பிரேசில் நாட்டில் சிகிச்சை பலனிற்றி 1,940 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் 1,037 பேரும் மெக்சிகோவில் 709 பேரும் ரஷ்யாவில் 475 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகெங்கும் 8,138 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா உயிரிழப்பு 26.59 லட்சத்தைக் கடந்துள்ளது.

2.07 கோடி பேர் தற்போது கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட டாப் 10 நாடுகளில் ஏழு நாடுகள் ஐரோப்பியாவை சேர்ந்தவை. வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் அச்சத்தில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+