Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிஜ் பூஷன்: 3 மாசமா ஒன்னுமே செய்யல.. அறிக்கை என்னாச்சு? சீறும் மல்யுத்த வீரர்கள்.. திணறும் தலைநகர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது காவல்துறையில் 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்களை கொடுத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து முன்னணி வீரர்கள்/வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங். இவர் உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 3 முறை இந்த சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். கடந்த ஜனவரி மாதம் இவருக்கு எதிராக இந்தியாவின் சர்வதேச மல்யுத்த வீரர்களான விக்னேஷ் போகத், பஜ்ரங் புனியா, சக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் சக மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Wrestlers again protest against BJP MP Brij Bhushan for not taking any action against Sharan Singh

இது நாடு முழுவதும் பேசுபொருளானது. இதனையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த போராட்டத்தின் விளைவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த போராட்டம் முடிவுக்கு வரப்பட்டது.

ஆனால் ஏறத்தாழ 3 மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும், இந்த வன்கொடுமைக்கு காரணமாக இருந்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி தற்போது மீண்டும் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (ஏப்.23) தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வீரர்கள் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது டெல்லி கனாட் பிளேஸ் காவல் நிலையத்திலும், டெல்லி மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

மேலும் தங்களது போராட்டத்தின் உறுதியை வெளிப்படுத்தவும், எதிர்ப்பை பதிவு செய்யவும் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்/வீராங்கனைகள் போராட்டம் நடைபெற்ற சாலையின் ஓரத்தில் இரவு உறங்கியுள்ளனர். இது குறித்து பஜ்ரங் புனியா கூறுகையில், "மல்யுத்தத்தை காப்பாற்றதான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், "நாங்கள் மனரீதியான பிரச்னைகளை அனுபவித்து வருகிறோம். இது பெண் விளையாட்டு வீராங்கனைகளின் மரியாதை சம்பந்தப்பட்ட விவகாரம். ஆனால் இது பிரச்னை குறித்து நாங்கள் குற்றம்சாட்டியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை" என்று வினேஷ் போகத் கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது டெல்லி கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. புகாரில் 6 வீராங்கனைகள் மற்றும் ஒரு 18 வயதுக்கு குறைவான வீராங்கனையிடம் பிரிஜ் பூஷன் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் விசாரணையை தொடங்கியுள்ளனர். எனவே இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் பெறப்பட்டுள்ளதை டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ஒப்புக்கொண்டார்.

Wrestlers again protest against BJP MP Brij Bhushan for not taking any action against Sharan Singh

தற்போது மீண்டும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஆதரவளித்தால் வரவேற்போம் என்று வீரர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+