பாஜகவின் பிரிஜ் பூஷனுக்கு எதிராக தொடங்கியது போராட்டம்.. அரசியல் ஆதரவை நாடும் மல்யுத்த வீரர்கள்
டெல்லி: மல்யுத்த வீரர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் எனவே இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை அரசியல் கட்சியினர் தங்கள் போராட்டங்களில் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தியாவும்-சீனாவும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்திருந்தாலும், சீனாவுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி அதிகம் இருக்கிறது. இந்த இடைவெளி விளையாட்டு துறையில் சற்று கூடுதலாகவே இருக்கிறது என்றால் அது மிகையல்ல. நம்முடைய வீரர்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல முன்னேறி வர தொடங்கியுள்ளனர். ஆனால் இதற்காக அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. சர்வதேச நாடுகளின் மத்தியல் நம்முடைய தேசிய கொடியை உயர்த்த இந்த வேதனைகளை தாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆனால் எவ்வளவுதான் தாங்க முடியும்? அப்படி தாங்க முடியாமல் வெடித்ததுதான் மல்யுத்த வீரர்களின் பிரச்னை. மல்யுத்தத்தில் காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டி என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றவர்தான் விக்னேஷ் போகத். தற்போது இவர் தலைமையில் முக்கிய மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரணம் பாலியல் சுரண்டல்தான். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் ஏராளமான இளம் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக சுரண்டுவதாக இவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை அவர்கள் தொடங்கியபோது நாடே இந்த போராட்டத்தை கவனித்தது. போராட்டத்தில் பங்கேற்ற வீரர்கள் வைத்த முக்கிய கோரிக்கை, 'பிரிஜ் பூஷன் சரண் சிங்கை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கி அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதுதான். இவர்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரிஜ் சிங்கை பொறுப்பிலிருந்து நீக்கியது. ஆனால் தற்போது வரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் சென்றிருந்தார். ஆனால் அவர்களை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஏற்கவில்லை. பிருந்தா காரத் மட்டுமல்லாது எந்த அரசியல் கட்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தது. இது தங்களுக்குள் நடக்கும் பிரச்னை என்று கூறி பிருந்தா காரத்தை திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில் ஜனவரியில் போராட்டமும் தற்காலிகமாக வாபஸ் வாங்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வாக்குறுதி அளித்ததைப்போல அல்லாமல் 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் சிங் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி நேற்று (ஏப்.23) முதல் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணாவில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, "நாங்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் கட்சியினரை நாங்கள் வரவேற்கின்றோம்.
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என எந்த கட்சியாக இருந்தாலும் எங்கள் போராட்டத்திற்கு துணை நிற்பதெனில் அக்கட்சியினரை நாங்கள் தாராளமாக வரவேற்கிறோம். கட்சியினரை கடந்து மக்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இன்று சுயமரியாதைக்காக போராடவில்லை என்றால் நாளை எதற்காகவும் நம்மால் போராட முடியாமல் போய்விடும்" என்று கூறியுள்ளார். அதேபோல சாக்ஷி மாலிக் கூறுகையில், "நேற்றிரவு முதல் நாங்கள் இங்கு இருக்கிறோம். எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். தற்போது வரை பிரிஜ் சிங் மீது விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications