இந்தியாவில் சைபர் குற்றங்களை தடுக்கும் போர்ட்டலில் இணைய மறுக்கும் x தளம்! நழுவும் எலான் மஸ்க்!
டெல்லி: சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு SAHYOG எனும் போர்ட்டலை செயல்படுத்தி வருகிறது. இதில் நாங்கள் இணைய மாட்டோம் என்று எலான் மஸ்க்கின் சோஷியல் மீடியா தளமான எக்ஸ் (X) முரண்டு பிடித்து வருகிறது.
SAHYOG போர்ட்டல் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) பிரிவு 69A-க்கு உட்பட்ட சட்ட வழிமுறைகளை மீறுகிறது என்பதால் எங்களால் இணைய முடியாது என்று x தெரிவித்திருக்கிறது.

டெக்னாலஜி வளர்ந்திருப்பதால், டிஜிட்டல் முறையிலான மோசடிகள் அதிகரித்திருக்கின்றன. மறுபுறம் சைபர் கிரைம்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இதனை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் SAHYOG எனும் போர்ட்டல் உருவாக்கப்பட்டது. சட்டவிரோதமான கன்டென்ட்கள் சோஷியல் மீடியாக்களில் பகிரப்படும்போது, அதை நீக்க மத்திய அரசு கொடுக்கும் அறிவிப்புகளை தானியங்கி முறையில் சோஷியல் மீடியா நிறுவனங்களுக்கு அனுப்ப இந்த போர்ட்டல் உதவியாக இருக்கிறது.
மட்டுமல்லாது இந்த போர்ட்டல் மூலம் குற்றப்புலனாய்வுத்துறைகள் (Crime Investigation Departments) மற்றும் சட்ட அமலாக்கத்துறைகள் (Law Enforcement Agencies) சமூக ஊடக நிறுவனங்களிடம் நேரடியாக தகவல் கோர அனுமதிக்கிறது. உதாரணமாக ஒருவர் காணாமல் போய்விட்டார் எனில், அவர் கடைசியாக சோஷியல் மீடியாவில் என்ன பகிர்ந்தார்? யாருடன் பேசினார்? போன்ற விவரங்களை SAHYOG மூலம் காவல்துறை கேட்டு பெற முடியும். இதற்கு சோஷியல் மீடியாக்கள் SAHYOG போர்ட்டலில் இணைந்திருக்க வேண்டும்.
ஆனால் x தளம் இதில் இணைய மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது பதிலளித்த x தரப்பு, "SAHYOG போர்ட்டல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 69A-க்கு உட்பட்ட சட்ட வழிமுறைகளை மீறுகிறது. இந்த போர்ட்டல் blocking உத்தரவுகளுக்கான உள்ளடக்கிய சட்ட நடைமுறைகளை புறக்கணிக்கிறது" என்று விமர்சித்திருக்கிறது.
அதாவது ஒரு போஸ்ட்டை நீக்க வேண்டும் எனில் அதற்கான உரிய காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும். இதனை IT Act, Section 69A உறுதி செய்கிறது. ஆனால், SAHYOG போர்ட்டல் காரணங்களை சொல்லாமல் டெலிட் செய்ய உத்தரவிடுகிறது. இதைத்தான் x தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மறுபுறும் x தளத்திற்கு எதிராக மத்திய அரசு சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதைப் பற்றிய தகவல்களை நீக்குவதற்கான கோரிக்கைகள் மீது x உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய சைபர் குற்ற ஒழிப்பு ஒருங்கிணைப்புக் கழகம் (I4C) எழுப்பிய கோரிக்கைகளுக்கு x நிறுவனம் சரியாக பதில் அளிக்கவில்லை என, அந்நிறுவனத்திற்கு எதிராக I4C புகார் அளித்துள்ளது.
Telegram, Apple, Google, LinkedIn, YouTube, Microsoft, Facebook, Instagram, WhatsApp என சுமார் 38 நிறுவனங்கள் இந்த போர்ட்டலில் இணைந்திருக்கின்றன. ஆனால் இன்னும் x தளம் மட்டும் இணையாமல் இருப்பது ஏன்?" என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 29ம் தேதி நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications