"இரண்டாக பிளந்த தேசம்.." மொத்தமாக உருக்குலைந்த துருக்கி.. பேரழிவை தந்த பூகம்பத்தை மறக்க முடியுமா..!
டெல்லி: துருக்கி மற்றும் சிரியாவில் இந்தாண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் என்பது 2023இல் மறக்கவே முடியாத வடுவை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
இந்தாண்டு கிட்டத்தட்ட முடியப் போகிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்திற்கு நாம் வந்துவிட்டோம். மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் சர்வதேச அரசியலில் இந்தாண்டு பல முக்கிய மாற்றங்கள் அரங்கேறின.

இந்தாண்டு முடிந்தாலும் கூட சர்வதேச அரசியலில் இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்பது நிச்சயம் தொடரும். அப்படி இந்தாண்டு உலகை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று சிரியா துருக்கி நிலநடுக்கம்.
துருக்கி நிலநடுக்கம்: கடந்த பிப். மாதம் துருக்கியில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 7.8ஆகப் பதிவாகி இருந்தது. இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கடந்த பிப். 6ஆம் தேதி இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் பொதுமக்களால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.
கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்திலேயே பல கட்டிடங்கள் சரிந்த நிலையில், அது பல நூறு கட்டிடங்களைப் பலவீனப்படுத்தி இருந்தது. அப்போது அங்கே அடுத்தடுத்து பல நூறு சிறு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. இவை பலவீனமாக இருந்த கட்டிடங்களை அப்படியே முழுமையாகச் சாய்த்துவிட்டன. இதுவே அங்கே உயிர் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது.
பேரழிவு: இந்த நூற்றாண்டின் மிக மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாகத் துருக்கியில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் கூட இதன் பாதிப்புகள் இருந்தன. அதேபோல சிரியாவில் 8,400 பேர் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர்.
காரணம்: அதேபோல நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி இல்லை. இதனால் அங்கே உள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாக்கும் வகையில் கட்டப்பட்டு இருக்காது. இதன் காரணமாகவே நிலநடுக்கத்தின் போது பல கட்டிடங்கள் அப்படியே சீட்டுக் கட்டு போலச் சரிந்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் மிக மோசமாக இருந்த நிலையில், மீட்புப் பணிகள் நிறைவடையவே பல மாதங்கள் ஆனது. பூகம்பத்தால் சிக்கி சின்னாபின்னமான துருக்கி நாட்டிற்கு அப்போது இந்தியா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளும் உதவின. இருப்பினும், இன்னுமே கூட துருக்கி இந்த பேரழிவில் இருந்து முழுமையாக மீளவில்லை.
மிகப் பெரிய விரிசல்: இது குறித்து இங்கிலாந்தின் பூகம்பங்கள், எரிமலைகள் மற்றும் டெக்டானிக்ஸ் கண்காணிப்பு மையம் (COMET) ஆய்வாளர்கள் கூறுகையில், "துருக்கியில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.. துருக்கிக்கு நடுவே மிக நீண்ட தூரத்திற்கு நீளும் இரண்டு விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று மத்தியதரைக்கடலின் வடகிழக்கு முனையிலிருந்து வடகிழக்கே 300 கிலோமீட்டர்கள் நீண்டது.
அடுத்து விரிசல் 125 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இது இரண்டாவது பூகம்பத்தின் போது கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் கழித்து ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் எவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தது என்பதை இது காட்டியிருக்கிறது. இரண்டு விரிசல்களும் சேர்ந்து 425 கிமீ நீளத்திற்கு விரிசல்கள் ஏற்பட்டன" என்று தெரிவித்துள்ளனர்.
கற்கும் பாடம்: நிலநடுக்கத்தை மற்ற இயற்கை பாதிப்புகள் போல முன்கூட்டியே கணிக்க முடியாது என்ற போதிலும், குறைந்தபட்சம் கட்டிடங்களை வலிமையாகக் கட்டினால் உயிரிழப்புகளைக் குறைக்கலாம். இந்தாண்டு பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடமாக இது இருக்க வேண்டும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications