முதல்வர் பதவியில் இருந்து யோகி நீக்கம்? உ.பி அரசியலில் காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்! என்ன காரணம்
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவில் இப்போது மிகப் பெரிய உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ள நிலையில், அவருக்கு எதிராகத் துணை முதல்வர் மவுரியா அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல பாயிண்டுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கே உத்தரப் பிரதேசத்தில் விரைவில் பல மாற்றங்கள் வரலாம் என்றும் கூறப்படுகிறது
பரபரப்பு: லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போக முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் காரணம் என்று சஞ்சய் நிஷாத் தலைமையிலான நிஷாத் கட்சி மற்றும் அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் (சோனேலால்) போன்ற கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன. இது ஒரு பக்கம் இருக்கத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, அமைச்சரவை கூட்டம் உட்பட முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
மவுரியா: சமீபத்தில் உபி தலைநகர் லக்னோவில் நடந்த உத்தரப்பிரதேச பாஜக செயற்குழு கூட்டத்தில் மவுரியா வெளிப்படையாகவே முதல்வர் ஆதித்யநாத்தை கடுமையாகச் சாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் யோகியின் செயல்பாடுகள் மீது பாஜகவிலேயே பலரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மவுரியா இதுபோல விமர்சித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் மவுரியா, "பாஜக தொண்டர்களின் வலியும் என்னுடைய வலியும் ஒன்றுதான். அரசை விடக் கட்சி பெரியது. கட்சியை விடப் பெரியவர்கள் யாரும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் தேர்தல் தோல்வி குறித்து யோகி ஆதித்யநாத் வேறு விதமான கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது அதீத நம்பிக்கையும், கூட்டணிக் கட்சிகள் அந்தந்த சமூகங்களின் வாக்குகளைப் பெறத் தவறியதே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று யோகி கூறிய நிலையில், அதற்கு நேர்மாறாக மவுரியாவின் கருத்துகள் இருக்கிறது.
டெல்லி தலைமை: வெளிப்படையாகவே இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் வந்துவிட்ட நிலையில், பாஜக டெல்லி தலைமை நிலைமையைக் கட்டுப்படுத்த முயல்கிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மவுரியாவை சந்தித்தார். மேலும், உத்தரப் பிரதேச மாநில தலைவர் பூபேந்திர சிங் புதன்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
நெருக்கடியை சமாளிக்க உத்தர பிரதேசத்திற்கு புதிய பாஜக தலைவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
மவுரியாவுக்கு முக்கிய பதவி: இதில் மவுரியாவுக்கு கட்சியில் மிக முக்கிய பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க ஓபிசி முகமாக மவுரியா இருக்கிறார். மேலும், ஆர்எஸ்எஸ் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. இதனால் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், உத்தர பிரதேச மாநில தலைவராக பூபேந்திர சிங் இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஒபிசி தலைவர் உபி தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
யோகி ஆதித்யநாத்: அதேபோல யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இருப்பினும், இந்த நேரத்தில் டெல்லி தலைமைக்கு அப்படி எந்தவொரு திட்டமும் இல்லையாம். தற்போதைய சூழலில் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் தொடர்வார் என்றும் கட்சி ரீதியாக மட்டுமே மாற்றங்கள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை












Click it and Unblock the Notifications