தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசு டாக்டர்களாக பணியாற்றிய கணவன்-மனைவி இருவரும் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். சட்டப்படி திருமண உறவு நீடித்திருந்தாலும், அவர்கள் ஒன்றாக வசிக்கவில்லை. பலமுறை சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வியடைந்தன. இவர்களது வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தநிலையில், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயிரற்ற திருமண உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோர்ட்டுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீண்ட காலம் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதற்காக எடுத்தவுடனே விவாகரத்து தந்துவிட முடியாது என்பதே இன்றைக்கு நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை பார்த்தால் எதார்த்தமாக தெரியும். எனினும் தம்பதியரிடையே சேர்த்து வைப்பதற்காக நடத்தப்பட்ட அனைத்து சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்திருந்தால், இனி அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ 0.1% கூட நடைமுறை சாத்தியமே இல்லை ("உயிரற்ற, உறைந்துபோன உறவு") என்று நீதிமன்றம் முழுமையாகத் திருப்தி அடைந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அரசு டாக்டர்கள் தொடர்ந்த வழக்கில் கூறியுள்ளது.

Supreme Court directs courts to put an end to dead marriages divorce for couples living apart

அரசு டாக்டர்களாக பணியாற்றிய கணவன்-மனைவி இருவரும் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். சட்டப்படி திருமண உறவு நீடித்திருந்தாலும், அவர்கள் ஒன்றாக வசிக்கவில்லை. பலமுறை சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வியடைந்தன. பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசீ தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

அதில் கூறுகையில், மனுதாரர் தொடர்ந்த வழக்கில் மனைவி கணவருடன் மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாக கூறினாலும், அதற்கான எந்த நடைமுறை முயற்சிக்கும் வாய்ப்பு இல்லை. இந்த திருமணம் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. மனைவி குஜராத்திலும், கணவர் ராஜஸ்தானிலும் பணியாற்றி வந்து இருக்கின்றனர். திருமண வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான உண்மையான விருப்பம் இருவரிடமும் இல்லை. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. மேலும், இருவரும் அரசு மருத்துவர்கள் பொருளாதார ரீதியாக சுயநிறைவு பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த சூழலில், திருமண உறவை செயற்கையாக நீட்டிப்பதை விட அதை கலைப்பதே நியாயமானது.

நீண்டகாலமாக பிரிந்து வாழும் தம்பதிகளை, எந்தவிதமான சமரச வாய்ப்பும் இல்லாத நிலையிலும் திருமண உறவுக்குள் கட்டாயமாக வைத்திருப்பது நியாயம் கிடையாது. "உயிரற்ற, உறைந்துபோன" திருமண உறவுகளுக்கு கோர்ட்டுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உறவு இறந்துவிட்டால் கட்டாயம் தொடர வேண்டியதில்லை. ஒரு திருமண உறவு உண்மையில் முடிவடைந்து விட்ட நிலையில், அதை சட்ட ரீதியாக உயிருடன் வைத்திருப்பது ஏமாற்றம், மனஅழுத்தம் மற்றும் உளவியல் வெறுமையை மட்டுமே உருவாக்கும்.

மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திருமண வழக்குகளில், தம்பதிகளை உயிரற்ற உறவுக்குள் கட்டாயமாக வைத்திருப்பதைவிட, அவர்களுக்கு பயனுள்ள சட்ட நிவாரணம் வழங்கி புதிய வாழ்க்கையைத் தொடங்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இத்தகைய உறவுகளை முடிவுக்கு கொண்டு வருவது தம்பதிகளின் நலனுக்காக மட்டுமல்ல, சமூக நலனுக்கும் அவசியம். பல ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வரும் தம்பதிகளை அர்த்தமற்ற உறவில் பிணைத்து வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அத்தகைய உறவுகளில் திருமணத்தின் புனிதத்தன்மையே எஞ்சியிருக்காது.

கடந்த 2023-ம் ஆண்டு ஷில்பா சைலேஷ்-வருண் ஸ்ரீநிவாசன் தம்பதி வழக்கில் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பில் திருமண உறவு மீள முடியாத வகையில் முற்றிலும் சிதைந்துவிட்டால், பிரிவு 142-ன் கீழ் சுப்ரீம் கோர்ட்டு விவாகரத்து வழங்க முடியும் என்று கூறியுள்ளது. அதன்படி இந்த வழக்கிலும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 142-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விவாகரத்து வழங்குகிறோம்" இவ்வாறு அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+