50 வயதான அன்புமணி போன்ற இளைஞர்களே நாட்டுக்கு தேவை... பிரேமலதா கிண்டல்
Recommended Video

தர்மபுரி: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை கிண்டல் செய்யும் தோணியில் பிரச்சாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவுடன் சேர ஆரம்பத்தில் ஆட்டம் காட்டிய தேமுதிக, கடைசியில் கூட்டணியில் இணைந்தது. பல விமர்சங்களை கடந்து தீவிர பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று தர்புமரி நான்கு ரோடு அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரேமலதா பேசுகையில், அரசியலில் உள்ள இளைஞர்களில் மிகவும் சிறந்தவர் அன்புமணி ராமதாஸ். தமிழகம் முன்னேற பல தொலைக்கு திட்டங்களை பற்றி பேசிவருகிறார் என்று புகழ்ந்து தள்ளினார்.

சுதீஷ் இளைஞர்
தற்போது தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுதீஷ், அன்புமணி, சரவணன் போன்ற ஒரு சிலர் தான் இளைஞர்கள் என்று பிரேமதலா தெரிவித்தார். மற்றவங்க எல்லாருமே வயசானவங்க என சொல்லாமல் சொல்கிறார் பிரேமலதா.

மதுவுக்கு எதிரான குரல்
மேலும் அவர் கூறுகையில் "மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அன்புமணி ராமதாஸ் தான் 108 ஆம்புலன்ஸ் கொண்டுவந்தார். புகையிலை மற்றும் டாஸ்மாக்கை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அன்புமணி. அதனால் இன்று புகைப்பிடிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது

50 வயது இளைஞர்
இளைஞர்களை நல்வழிப்படுத்த அன்புமணி போன்ற இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை. இளைஞரான அன்புமணிக்கு 50வயது தான் ஆகிறது. அன்புமணி ஒரு யங் சாப்" இவ்வாறு கூறினார்.

கிண்டல் செய்கிறாரா?
அண்மையில் புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று சொல்லிவிட்டு, ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைக்கலாம் என சமாளித்தார். இப்போது அன்புமணியை 50 வயது இளைஞர் என்கிறார். இதனால் அன்புமணி நிஜமாகவே பிரேமலதா பாராட்டுகிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என அவரது ஆதரவாளர்கள் நேற்று குழம்பி போயினர்.












Click it and Unblock the Notifications