“வெட்கக்கேடு.. கேவலம்".. வேங்கைவயல் கொடூரர்களை இன்னும் தண்டிக்காததே இதற்கு காரணம்: சீறிய பாஜக!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி. வேங்கைவயல் குற்றவாளிகளை தண்டிக்காமல் காலம் தள்ளிய கொடுமையே மீண்டும் இது போன்றதொரு அவலத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இன்று காலை துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த தொட்டியில் மலம் கலந்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்தத் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்திலேயே இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையில் தற்போது தருமபுரி மாவட்டத்தில் அதே போன்ற நிகழ்வு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், "தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த அருவருப்பான, வெட்கக்கேடான, கேவலமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த அருவருப்பான, வெட்கக்கேடான, கேவலமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த இழிசெயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார்…
— Narayanan Thirupathy (@narayanantbjp) September 21, 2023
இந்த இழிசெயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வேங்கை வயலில் பட்டியிலன மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்தை செய்த நபர்களை முந்நூறு நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை தமிழக அரசு கண்டு பிடிக்க முடியாததும், அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றியவர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும் தான் மீண்டும் இது போன்றதொரு அவலத்தை நாம் காண வழி வகுத்துள்ளது.
இனி இது போன்ற கேவலங்கள், கொடூரங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு, வேங்கை வயல் மற்றும் பனைக்குளம் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் சமூக நீதி காக்கிறோம் என்று மார்தட்டி கொள்ளும் திமுக இனி, சமூக நீதி தவறிய திமுக ஆட்சி, தீண்டாமையை ஒடுக்க தவறிய கட்சி என்றே அழைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications