“அறைஞ்சன்னா அவ்ளோதான்.. எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க?” லெஃப்ட் ரைட் வாங்கிய பெண் அதிகாரி!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: “ஒரு அறை அறைஞ்சன்னா அவ்ளோதான்.. எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க.?” என ரகசிய இடத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? எனப் பார்த்துச் சொல்பவரை கையும் களவுமாகப் பிடித்து லெஃப்ட் ரைட் வாங்கியுள்ளார் பெண் அதிகாரி ஒருவர்.

தருமபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என்பதை அறிந்து, கருக்கலைப்பு நடைபெறுவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக புகார்கள் கிளம்பின. இதையடுத்து பெண் சிசுக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Dharmapuri Fraud Crime

கடந்த ஓராண்டில் தருமபுரியை அடுத்த ராஜாபேட்டை, காரிமங்கலம், கம்பைநல்லூர், பரிகம் ஆகிய 4 இடங்களில் இவ்வாறு செயல்பட்ட கும்பல் சுகாதாரத் துறையினரின் நடவடிக்கையால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஸ்கேன் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்யும் கும்பல் மீண்டும் தருமபுரி மாவட்டத்தில் இயங்குவதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இடைத்தரகர்களின் தொடர்பு எண்களை சேகரித்து, தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரைச் சேர்ந்த லலிதா என்பவர், அருகில் உள்ள நத்த தள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் சமையலராக பணியாற்றிக் கொண்டு, கருக்கலைப்பு கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கர்ப்பிணிகளை ரகசிய இடத்திற்கு அழைத்து வருவதாக ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து லலிதாவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது லலிதா இன்று ஸ்கேன் செய்வதாகவும் தான் சொல்லும் இடத்திற்கு பணத்துடன் வருமாறும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவரை கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிவதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பென்னாகரம் செல்லும் வழியில் உள்ள சோம்பட்டி என்ற இடத்திற்கு அவரை வரவழைத்து இருசக்கர வாகனத்தில் நெற்குந்திக்கு அழைத்துச் சென்றுள்ளார் லலிதா. அங்கு, முத்தப்பா நகரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனி வீட்டில் ஸ்கேன் இயந்திரம் வைத்து, கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர், கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒருவருக்கு ரூ.13 ஆயிரம் பெற்றுக் கொண்டு 5 நிமிடத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர். அந்த வீட்டில் ரகசியமாக ஸ்கேன் செய்து கொண்டிருந்த போதே, இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான குழுவினர், அந்த சட்டவிரோத கும்பலை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் முருகேசன் முறையாக மருத்துவம் படிக்காமல் இயந்திரம் வாங்கிக் கொண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் அவ்வப்போது சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கர்ப்பிணிகளை வரவழைத்து கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்து வருவதும், கருவை கலைப்பதற்கு திருப்பத்தூருக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பென்னாகரம் காவல் துறையினரை வரவழைத்து கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், இடைத்தரகர் லலிதா, முருகேசன் உடன் வந்த நடராஜன், கார் ஓட்டுநர் சின்ராஜ் உள்ளிட்ட நான்கு பேரையும் ஒப்படைத்தனர். நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த ஸ்கேன் இயந்திரம், பணம், சொகுசு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், ஸ்கேன் பார்க்கும் பணியில் ஈடுபட்டு தற்போது கைதாகியுள்ள கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், இதே குற்றத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். அப்போது நீதிமன்றத்தில் இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன் என எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் கொடுத்து விட்டு வந்துள்ளார். ஆனால் மீண்டும் இதே குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

கையும் களவுமாகச் சிக்கிய கும்பலிடம், ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி கோபமாகப் பேசும் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. “ஒரு இழு இழுத்தேன்னா அவ்ளோதான்.. எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க? இனி நீ வெளியிலேயே வர முடியாது.” என ஸ்கேன் செய்து சொல்லும் முருகேசனிடம் அவர் கோபமாகப் பேசி உள்ளார்.

இடைத்தரகராகச் செயல்பட்ட பெண்ணிடம் கோபமாக பேசிய சாந்தி, “தொண்டைத் தண்ணி வத்த வத்த பேசுகிறோமே.. எந்த குழந்தையாக இருந்தால் என்ன? உன்னை மாதிரி 20 புரோக்கர்கள் இருக்கிறார்கள். உங்களை ஒழித்தால் தான் தருமபுரி உருப்படும்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+