அடிதூள்.. மு.க.ஸ்டாலினின் முத்தான திட்டம்! கையெழுத்து கூட வேண்டாம்..ஒரே நாளில் விவசாயிகளுக்கு கடன்!
தர்மபுரி: விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாகப் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ, இணைய வழியிலோ தங்களது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண்ணைக் கொண்டு பயிர்க்கடன் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (17.8.2025) தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். இந்த திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும்.
2025-26-ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் "தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
விவசாயப் பெருங்குடி மக்கள் பயிர்க்கடன் பெறுவதற்கு தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து. ஒரு வார காலத்திற்குள் அக்கடனைப் பெறும் நடைமுறையே தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நடைமுறையில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, இணையவழியில் (Online) பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் தருமபுரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக (Pilot) செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
பயிர்க்கடன் திட்டம்
மேற்கண்ட அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக முதற்கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ, இணைய வழியிலோ தங்களது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண்ணைக் கொண்டு பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் மிக எளிமையான முறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரேநாள் கடன்
விவசாயிகளின் நில உடைமை தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையிடம் இருந்தும் பயிர்சாகுபடி தொடர்பான விவரங்கள் வேளாண் துறையிடம் இருந்தும் இணைய வழியில் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து, சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு இணைய வழியில் அனுப்பப்படும். சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் மற்றும் கிளை மேலாளர் தங்கள் கணினி வழியே விவசாயிகள் குறித்த விவரங்களை சரிபார்த்து கடன் தொகையை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பர்.
தமிழக அரசு
இத்திட்டத்தை துவக்கி வைப்பதன் அடையாளமாக இன்று தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் பாலஜங்கமனஅள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தைச் சார்ந்த 5 விவசாயிகளுக்கு முதல்வர் அவர்களால் வட்டியில்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டது.
அரசு திட்டம்
நடப்பாண்டிலேயே விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இணையவழியில் கடன் பெறும் இத்திட்டம் படிப்படியாக சுயஉதவிக் குழுக்களுக்கான கடன், சிறு, குறு வணிகக்கடன் என பிற வகைக் கடன்களையும் இணைய வழியிலேயே விண்ணப்பித்துப் பெறுமளவிற்கு நடப்பாண்டிலேயே விரிவுபடுத்தப்படும்.
தருமபுரி திட்டம்
மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் 1989-ஆம் ஆண்டு தருமபுரியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.7.2023 அன்று தொடங்கி வைத்தார். அதியமான்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 117 வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, இன்றையதினம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.
-
அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. தூண் ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலவீனமா? முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!










Click it and Unblock the Notifications