"ஒதுக்குப்புறத்தில்" அட்டகாசம்.. பூசாரியின் கள்ளக்காதல்.. காதோடு வந்த காதலியின் "தோடு".. சபாஷ் போலீஸ்
கள்ளக்காதலியின் காதை அறுத்து கம்மலை திருடிச்சென்றுள்ளார் கோயில் பூசாரி
தர்மபுரி: திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க போய், கடைசியில் கள்ளக்காதல் சமாச்சாரத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளனர் தருமபுரி போலீசார்.. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்தும் வருகிறார்கள்..!!
தருமபுரியை அடுத்துள்ளது பஞ்சப்பள்ளி கங்கபாளையம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சின்னப்பையன்... இவரது மனைவி பெயர் ஜெயலட்சுமி.. 52 வயதாகிறது.
இவர் 2 நாட்களுக்கு முன்பு, இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார்... ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள வயல்வெளிக்கு சென்ற ஜெயலட்சுமி, அதற்கு பிறகு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

காதோடு வந்த தோடு
இதனிடையே, வயல்வெளியில் ரத்தக்காயங்களுடன் ஜெயலட்சுமி மயங்கி விழுந்து கிடப்பதை, அந்த சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்... உடனடியாக இது குறித்து ஜெயலட்சுமியின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.. பிறகு குடும்பத்தினர் வயல்வெளியில் விழுந்து கிடந்த ஜெயலட்சுமியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்... இந்த குறித்து பஞ்சபள்ளி போலீசிலும் புகார் தரப்பட்டது... இது குறித்து மயக்கம் தெளிந்த ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரித்தனர்.. அப்போது ஜெயலட்சுமி, தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டு, 2 காதுகளிலும் இருந்த தங்க தோடுகளை வலுக்கட்டாயமாக பறித்துச் விட்டதாக சொன்னார்.

கம்மல்
அந்த நபர் கம்மலை இழுத்து பிடித்ததில், 2 காதுகளும் பிய்ந்து ரத்தம் கொட்டியதால் மயக்கமடைந்து விழுந்து விட்டதாகவும் தெரிவித்தார்... இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காதுகளை பிய்த்து தோடுகளை திருடிசென்ற அந்த மர்ம நபரை தேட துவங்கினர்.. கடைசியில்தான் விஷயம் புரிந்தது, இதெல்லாம் கள்ளக்காதல் செய்த பயங்கரம் என்று.. போலீசார் திருடனை பிடிக்க முயன்று, இறுதியில் கள்ளக்காதல் சமாச்சாரத்தை வெளியே கொண்டு வந்துவிட்டனர்.. 52 வயது ஜெயலட்சுமிக்கும், 64 வயதான பூசாரி மாதனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

சின்ன பையன்
இதில் பஞ்சப்பள்ளி அடுத்த கூத்தாடிபட்டியில் உள்ள கோயிலின் பூசாரி மாதன்.. ஜெயலட்சுமியின் கணவர் சின்னப்பையன், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. அதற்கு பிறகு கோயில் பூசாரி மாதனுடன் ஜெயலட்சுமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது... ஆனால், ஜெயலட்சுமிக்கு வேறு ஒரு நபருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது... இந்த விஷயம் தெரிந்த பூசாரி கொந்தளித்து விட்டார்.. இதுதொடர்பான வாக்குவாதம் இருவருக்கும் நடந்துள்ளது.. இறுதியில், கடந்த 27ம்தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க வயல்வெளிக்கு வந்த ஜெயலட்சுமியை, இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளார் மாதன்.

சின்ன பையன்
இதில் பஞ்சப்பள்ளி அடுத்த கூத்தாடிபட்டியில் உள்ள கோயிலின் பூசாரி மாதன்.. ஜெயலட்சுமியின் கணவர் சின்னப்பையன், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. அதற்கு பிறகு கோயில் பூசாரி மாதனுடன் ஜெயலட்சுமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது... ஆனால், ஜெயலட்சுமிக்கு வேறு ஒரு நபருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது... இந்த விஷயம் தெரிந்த பூசாரி கொந்தளித்து விட்டார்.. இதுதொடர்பான வாக்குவாதம் இருவருக்கும் நடந்துள்ளது.. இறுதியில், கடந்த 27ம்தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க வயல்வெளிக்கு வந்த ஜெயலட்சுமியை, இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளார் மாதன்.

இரும்பு ராடார்
இதில் பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்... ஆனால், ஜெயலட்சுமி இறந்துவிட்டதாக நினைத்து, மாதன், ஜெயலட்சுமியின் காதுகளை அறுத்து, தோடுகளை எடுத்து சென்றுள்ளார்.. மயக்கம் தெளிந்த ஜெயலட்சுமியும் காது அறுபட்டதையடுத்து, திருட்டு சம்பவம் போல போலீசாரிடம் வாக்குமூலம் தந்திருந்தார்.. ஆனால், கள்ளக்காதலை கண்டுபிடித்ததுடன், சம்பந்தப்பட்ட பூசாரி மாதனையும் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது... ஜெயலட்சுமிக்கும் சிகிச்சை நடக்கிறது.. ஒரே நாளில் இந்த சம்பவத்தை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications