தர்மபுரி பெண்ணுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? ரூம் கதவை திறந்தால்? ஆடிப்போன பாப்பிரெட்டிப்பட்டி
தர்மபுரி: தமிழகத்தில் நாள்தோறும் குடும்ப வன்முறைகள் அதிகமாகி வருவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், தர்மபுரி மாவட்டத்தில் தம்பதிக்குள் நடந்த சம்பவம், மேலும் வருத்தத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அதிலும்,. பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள், இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியாமல் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது.. விக்கிரவாண்டி நகர் பகுதியில் வசித்து வரும் புனிதன் என்பவருக்கு 22 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர் பவுசியா.. 19 வயதாகிறது.. இருவருமே காதலித்து 2 வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்து 20 நாட்கள் ஆனபிறகும், பவுசியா மன அழுத்தத்தில் இருந்தாராம். மகளுக்கு பிரசவம் நடந்ததால், பவுசியாவுடனேயே அவருடைய பெற்றோரும் தங்கியிருந்தனர்..
பவுசியா - பக்கெட்டில் தண்ணீர்
ஆனால், சம்பவத்தன்று பவுசியா நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவை தட்டி பார்த்து பிறகு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள்.. அப்போது பவுசியா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும், பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடப்பதும் தெரிய வந்தது.
அதாவது, குழந்தையை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்துவிட்டு, பவுசியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பிறகு அனைவரும் சேர்ந்து பவுசியாவை காப்பாற்றி விட்டார்கள். ஆனால் அந்த ஆண் குழந்தை அநியாயமாக இறந்துவிட்டது.
பெற்ற குழந்தைகள் பரிதாபம்
கணவனுடன் தகராறு என்றாலும் சரி, அல்லது வேறு எந்த பிரச்சனை என்றாலும்சரி, தங்களது பிள்ளைகளை கொன்றுவிட்டுதான், பெற்ற தாய்மார்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.. அல்லது பவுசியா போன்ற பெண்கள், காரணமே இல்லாமல், பச்சிளம் குழந்தைகளை கொல்கிறார்கள்..
இதோ தர்மபுரியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி வடந்தையூர் பகுதியை சேர்ந்தவர் அக்பர்.. இவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது 20 வயது மனைவி தஸ்லீம்பானு.. இந்த தம்பதிக்கு ஆத்தீப் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது..
தர்மபுரி பேச்சுவார்த்தை
இந்த தம்பதி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.. எனவே, மஞ்சவாடியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார் தஸ்லீம்பானு.. கடந்த சில நாட்களுக்கு முன்பு தஸ்லீம் பானுவை பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
நேற்று மாலை அக்பர், வீட்டிற்கு வந்தபோது, வீடு உட்புறம் பூட்டப்பட்டு இருந்தது. கதவிடுக்கு வழியாக பார்த்தபோது, தஸ்லீம்பானு துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தையும் இறந்துகிடந்தது.. அந்த குழந்தையின் இடது கை மணிக்கட்டில் பிளேடால் அறுக்கப்பட்டிருந்தது..
பரபரப்பு - அதிர்ச்சி
அதேபோல, தஸ்லீம்பானு தன்னுடைய 2 கைகளிலும் பிளேடால் அறுத்துக்கொண்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து 2 சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடு உள்பக்கம் தாழிட்டு இருந்ததால், குழந்தையை கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றாலும், தருமபுரியில் இந்த சம்பவம் பரபரப்பை தந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
