தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெ.விடம் நல்ல பெயர் எடுக்க போட்டி போட்டு.. பஸ்ஸை எரித்து.. 3 இளந்தளிர்களை கருக்கி.. மறக்க முடியுமா!

தர்மபுரி பஸ் எரித்த வழக்கில் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை

    தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பில் 3 மாணவிகள் எரித்துகொல்லப்பட்ட சம்பவத்தின் வழக்கில் சேலம் நீதிமன்றம் தூக்கு என்று தீர்ப்பளித்தபோது இந்தியாவே கொஞ்சம் அதிர்ந்துதான் போனது.

    நாடு முழுவதும் பரபரப்பு அலைகள் பரவ அன்றைய செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் இதையே பிரதான செய்தியாக வெளியிட்டன.

    அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானலில் சொந்தமாக உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அவருக்கு சென்னை தனி நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

    சிறை தண்டனை விதிக்கப்பட்டாலே பெரும்பாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவே பொருள். அதே நேரத்தில் அந்த தீர்ப்பு தவறானது, ஆதாரமில்லாதது என்று ஜெயலலிதா கருதினால் மேல் முறையீடு செய்வதற்கு அவருக்கு வாய்ப்பும் இருந்தது... அவகாசமும் இருந்தது.

     தமிழக அரசின் அதிரடி உத்தரவு.. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை தமிழக அரசின் அதிரடி உத்தரவு.. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை

    அறிவுறுத்தவில்லை

    அறிவுறுத்தவில்லை

    ஆனால் அன்றைய ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? இது என் சொத்து பிரச்சனை, என் வழக்கை நானே சந்தித்து கொள்கிறேன், இதை வைத்து கொண்டு அதிமுகவினர் ரகளையில் ஈடுபடக் கூடாது என்று சொல்லி அல்லவா அறிவுறுத்தி இருக்க வேண்டும்? ஆனால் அதிமுகவினர் என்ன செய்தார்கள்? தமிழகம் முழுவதும், ஆர்ப்பாட்டம், மறியல், வாகனங்களுக்கு தீ, கடைகள் சூறை என்று வெறியாட்டம் போட்டனர்.

    சமுதாய கடமையா?

    சமுதாய கடமையா?

    அதன் உச்சக்கட்டம்தான் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம். அந்த தொண்டர்கள் அன்று ஏன் இதை செய்தார்கள்.வேறு ஒன்றுமில்லை.. ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதன் மூலம் பொறுப்புகளையும் பதவிகளையும் பெற வேண்டும். அவ்வளவே... இதில் கட்சிக்கடமையோ, சமுதாய கடமையோ, தேச தொண்டோ என ஒரு புண்ணாக்கும் இல்லை.

    மதுரை கவுன்சிலர்

    மதுரை கவுன்சிலர்

    மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டபோது ஜெயலலிதா அதை பகிரங்கமாக கண்டிக்கவும் இல்லை, பொதுமக்களிடம் வருத்தமும் சொல்லவில்லை. ஆனால் திமுக கருணாநிதி அதை செய்தார். மதுரையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கொல்லப்பட்டார்.

    லீலாவதி படுகொலை

    லீலாவதி படுகொலை

    அவரது பெயர் லீலாவதி. அந்த படுகொலையை செய்தது திமுகவினர்தான். இது தெரிந்தும், அவர்கள் மீது வழக்கு போட்டு சிறைதண்டனையும் பெற்றுத் தந்தார் கருணாநிதி. உண்மையிலேயே 3 மாணவிகள் எரிந்தது தமிழகத்தையே ஆட்டி போட்டது.

    பிரியாணி சாப்பிட்டார்கள்

    பிரியாணி சாப்பிட்டார்கள்

    ஒரு பெண்ணை பெற்று வளர்த்து ஆளாக்கி அநியாயமாக அக்னிக்கு தாரை வார்த்து கொடூரமாக மடிந்து போனால் அந்த பெற்றோர் எப்படியெல்லாம் பதைபதைத்து இருப்பார்கள்? ஆனால் இந்த 3 குற்றவாளிகளும் அன்றைக்கு என்ன செய்தார்கள் தெரியுமா? கோர்ட்டிலேயே உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டார்கள்.

    தூக்கும் கொலையே

    தூக்கும் கொலையே

    போட்டோவுக்கு பல்லை இளித்து கொண்டு போஸ் கொடுத்தார்கள். 3 மாணவிகளை கொன்றுகூட இவர்களுக்கு அகந்தையும் நெஞ்சழுத்தமும் கோர்ட்டு படியேறியும் அன்றைக்கு போகவில்லை. இவர்களுக்கு தூக்கு தண்டனை என்பது யாரும் எதிர்பார்க்க ஒன்றுதான். ஆனால் தூக்கு தண்டனையும் ஒரு வகை கொலைபோலதான்.

    அதிர்ச்சிதான்

    அதிர்ச்சிதான்

    எனவேதான் தூக்கு தண்டனை கிடைக்க போவது அதிமுகவினருக்குதானே என்று தெரிந்தும் கருணாநிதி அப்படிப்பட்ட தூக்குதண்டனை கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தார். ஆனால் இப்படி 3 மொட்டுகளை கருக வைத்தவர்கள் இன்று விடுதலை ஆவார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய ஒன்றுதான்!

    English summary
    Dharmapuri bus burning case 3 convicts released from Jail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X