அன்புமணியை மணமுடிக்கும் முன்பே பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்.. யார் இந்த சவுமியா?
சென்னை: பாமக தலைவர் அன்புமணியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் சவுமியா . தருமபுரியில் தற்போது களமிறங்கியுள்ள சவுமியா பிறந்த குடும்ப பின்னணி இப்போதைய தலைமுறையினர் பலரும் அறியாதது.
தருமபுரி லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார் சவுமியா அன்புமணி. இவர் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தருமபுரியில் அன்புமணி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டார். இவர் தனது வேட்புமனுவில் தனது பெயரில் ரூ 48 கோடியில் அசையா சொத்துக்களும் தனது கணவர் அன்புமணி பெயரில் 6.85 லட்சம் ரூபாயில் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சவுமியா அன்புமணி தனது பெயரில் 12 கோடியே 5 லட்சம் ரூபாயில் அசையும் சொத்துக்களும் தனது கணவர் அன்புமணி பெயரில் 67 லட்ச ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சவுமியா தனக்கு வங்கியில் 9 கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் பதிவு செய்திருக்கிறார்.
சவுமியா அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் பாமக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தருமபுரி தொகுதியில் வெற்றியை பெற்று டாக்டர் ராமதாஸுக்கு அந்த வெற்றியை காணிக்கையாக்குவேன் என்றார். மேலும் தேர்தல் என்பது தனக்கு புதிதல்ல, தைரியமாக எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சவுமியாவின் மாமனார் பாமக நிறுவனர், கணவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் லோக்சபா எம்பி, மாநிலங்களவை எம்பி, பாமக தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்து வருகிறார். ஆனால் அன்புமணியை சவுமியா திருமணம் செய்வதற்கு முன்பே அவர் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியுமா.
சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி, ஆரணி லோக்சபா தொகுதியின் எம்பியாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகி. இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2006 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தார். அது போல் இவருடைய சகோதரர் விஷ்ணுபிரசாத். இவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களில் ஒருவர். இவரும் தற்போது ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஷ்ணுபிரசாத்திற்கு கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications