Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.5 லட்சம் நிவாரணம் -தருமபுரி தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: மாதேஹள்ளியில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அமைந்து இருக்கிறது மாதேஹள்ளி கிராமம். இங்குள்ள காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 18 கிராம மக்களால் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் காளியம்மன் கோயிலில் 3 நாள் திருவிழா தொடங்கியது. இதில் பாரப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

தேர் விபத்து

தேர் விபத்து

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேர் திருவிழா தொடங்கி நடைபெற்றது. இன்று மாலை ஏராளமான பக்தர்கள் புடைசூழ காளியம்மன் கோயில் தேர் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. வயல் வெளியில் தேர் வந்துகொண்டிருந்தபோது அச்சாணி முறிந்து பக்தர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் பக்தர்கள் 5 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பக்தர்கள் உயிரிழப்பு

பக்தர்கள் உயிரிழப்பு

ஆனாலும் மனோகரன், சரவணன், மகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் 3 பக்தர்கள் படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தருமபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் அறிக்கை

முதலமைச்சர் அறிக்கை

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள மாதேஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோவில் தேர் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் அப்பகுதியினைச் சேர்ந்த மனோகரன் (வயது 57) மற்றும் சரவணன் (வயது 50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

ரூ.5 லட்சம் நிவாரணம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் மேலும், இந்த விபத்தில் காயமடைந்த நான்கு நபர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+